Budget 2025: வரிச்சலுகை குறித்த பெரிய அறிவிப்பு... அதிக லாபகரமானதாக மாறப்போகும் NPS

Union Budget 2025: அரசாங்க சேமிப்புத் திட்டங்களில் மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் அறிவிப்புகளை அரசாங்கம் இந்த முறை வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது. இது மக்களின் சேமிப்பை அதிகரிப்பதுடன் அந்த திட்டங்களில் அதிக முதலீட்டிற்கும் வழிவகுக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 23, 2025, 03:51 PM IST
  • NPS-ஐ மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்ற நிதியமைச்சர் இந்தத் திட்டத்தின் வரிச் சலுகைகளை அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது.
  • பழைய வரி விதிப்பு முறையில் பிரிவு 80CCD(1B) இன் கீழ் கிடைக்கும் ரூ.50,000 விலக்கு புதிய வரி முறைக்கும் நீட்டிக்கப்படலாம்.
  • பழைய வரி முறையைப் பின்பற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு, NPS -இல் முதலாளி / நிறுவனத்தின் பங்களிப்பு வரம்பு 14% ஆக அதிகரிக்கலாம்.
Budget 2025: வரிச்சலுகை குறித்த பெரிய அறிவிப்பு... அதிக லாபகரமானதாக மாறப்போகும் NPS title=

Union Budget 2025: இன்னும் சில நாட்களில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டடுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலின் போதும் அனைத்து தரப்பு மக்களும் தங்களுக்கான எதிர்பார்புகளுடன் காத்திருப்பது வழக்கம். இந்த ஆண்டும் எதிர்பார்ப்புகளுக்கு குறைவில்லை. பல துறைகளை சேர்ந்த பிரதிநிதிகளும் தங்கள் கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளன.

Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்

அரசாங்க சேமிப்புத் திட்டங்களில் மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் அறிவிப்புகளை அரசாங்கம் இந்த முறை வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது. இது மக்களின் சேமிப்பை அதிகரிப்பதுடன் அந்த திட்டங்களில் அதிக முதலீட்டிற்கும் வழிவகுக்கும். பட்ஜெட்டில் தேசிய ஓய்வூதிய முறை (NPS) குறித்து மத்திய அரசு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

National Pension System:

தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS -இல் முதலீடு செய்ய மக்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பட்ஜெடில் சில சிறப்பம்சம் வாய்ந்த அறிவிப்புகள் வெளியாகலாம் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஓய்வூதியத் திட்டம், 2009 ஆம் ஆண்டு பொதுமக்களுக்கும் விரிவுபடுத்தப்ப்பட்டது. ஓய்வூதியத் திட்டமிடலுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்பட்டாலும், இப்போது வரை சாதாரண மக்களுக்கு இதில் அதிக ஆர்வம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது.

Tax Relief: NPS-ல் வரிச்சலுகைகள் அதிகரிக்குமா?

NPS-ல் வரிச் சலுகைகளை அரசாங்கம் அதிகரித்தால், அதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று வரி நிபுணர்கள் நம்புகின்றனர். தற்போது, ​​பழைய வரி முறையின் கீழ் NPS முதலீட்டாளர்கள் அதிக சலுகைகளைப் பெறுகிறார்கள். இதில், பிரிவு 80CCD(1B) இன் கீழ் ரூ.50,000 கூடுதல் விலக்கு அளிக்கப்படுகின்றது. ஆனால், அது பழைய வரி முறையில் (Old Tax Regime) மட்டுமே கிடைக்கும்.

இந்த மாற்றகள் நிகழலாம்

- NPS-ஐ மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்ற நிதியமைச்சர் இந்தத் திட்டத்தின் வரிச் சலுகைகளை அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது. 

- பழைய வரி விதிப்பு முறையில் பிரிவு 80CCD(1B) இன் கீழ் கிடைக்கும் ரூ.50,000 விலக்கு புதிய வரி முறைக்கும் (New Tax Regime) நீட்டிக்கப்படலாம். 

- மேலும், பழைய வரி முறையைப் பின்பற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு, NPS -இல் முதலாளி / நிறுவனத்தின் பங்களிப்பு வரம்பு 14% ஆக அதிகரிக்கலாம். 

- கடந்த பட்ஜெட்டில், புதிய வரி முறையை ஏற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு இந்த வசதி வழங்கப்பட்டது.

NPS: இதில் கிடக்கும் வரிச் சலுகைகள் என்ன?

NPS முதலீட்டாளர்கள் பல்வேறு வழிகளில் வரிச் சலுகைகளைப் பெறுகிறார்கள். அவற்றை பற்றி இங்கே காணலாம்:

Section 80CCD(1): சம்பளம் வாங்கும் தனிநபர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் (அகவிலைப்படியுடன்) 10% வரை NPS-ல் முதலீடு செய்து வரி விலக்கு கோரலாம். இந்தப் பிரிவின் கீழ் அதிகபட்ச விலக்கு ரூ.1.5 லட்சம் ஆகும்.

Section 80CCD(2): பணியாளரின் NPS கணக்கில் அடிப்படை சம்பளத்தில் (அகவிலைப்படியுடன்) 10% வரை முதலாளி / நிறுவனம் பங்களிக்க முடியும். அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, இந்த வரம்பு 14% ஆகும்.

Section 80CCD(1B): NPS-இல் முதலீடு செய்வதன் மூலம் பிரிவு 80CCD(1B)-ன் கீழ் ரூ.50,000 கூடுதல் விலக்கு கிடைக்கும். ஆனால் இந்த நன்மை பழைய வரி முறையின் கீழ் மட்டுமே கிடைக்கும்.

மேலும் படிக்க | Budget 2025: ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன், வரி அடுக்குகள்... வரி செலுத்துவோருக்கு டபுள் குட் நியூஸ்!!

மேலும் படிக்க | Budget 2025: தனியார்துறை ஊழியர்களுக்கு அதிகரிக்கும் மாத ஓய்வூதியம், பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News