குடித்து விட்டு ரகளை செய்த ஜெயிலர் பட வில்லன்! வைரல் வீடியோ..

Viral Video Of Actor Vinayakan Being Drunk : ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்திருந்த விநாயகன், குடித்துவிட்டு ரகளை செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்த முழு விபரத்தை இங்கு பார்ப்போம். 

Written by - Yuvashree | Last Updated : Jan 21, 2025, 05:09 PM IST
  • ஜெயிலர் 2 பட நடிகரின் வைரல் வீடியோ..
  • குடித்து விட்டு பேசிய வீடியோ..
  • ரசிகர்கள் அதிர்ச்சி..
குடித்து விட்டு ரகளை செய்த ஜெயிலர் பட வில்லன்! வைரல் வீடியோ.. title=

Viral Video Of Actor Vinayakan Being Drunk : 2023 ஆம் ஆண்டு வெளியான செயலர் படத்தில் வில்லனாக நடித்தவர் விநாயகன். இவரது வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது. இவர் செய்த விஷயத்தால் ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர். 

ஜெயிலர் பட வில்லன்:

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில், இந்திய நட்சத்திரங்கள் பலர் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் யார் யாரோ வில்லன் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில், புதுவிதமான விநாயகன் நடித்திருந்தார்.

மலையாள திரை உலகை சேர்ந்த இவர், ஜெயிலர் படத்திற்கு முன்னர் பல படங்களின் நடித்திருக்கிறார். மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் மாறி மாறி நடித்து வரும் விநாயகன் சமீப சில காலமாக பலவித சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். 

குடித்துவிட்டு செய்த ரகளை..

விநாயகன் தனது வீட்டு பால்கனியில், குடித்துவிட்டு செய்யும் ரகளை வீடியோ தான் இப்போது வாரலாகி வருகிறது. பக்கத்து வீட்டுக்காரரிடம் ஏதோ காரசாரமாக பேசும் இவர், கத்திக்கொண்டே இருக்கிறார். இதற்கிடையில் அவர் இடுப்பில் கட்டி இருந்த லுங்கி கழன்று விழுகிறது. இதை பிடிக்க கூட அவரால் முடியவில்லை. பேசிக்கொண்டே இருந்து பின்னர் தன் கால்களை அகற்றி வேறு உட்காருகிறார். 

விநாயகத்தின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிலர், இவர் நடிகரா இல்லை குடிகாரரா என்றெல்லாம் கேள்வி எழுப்ப வருகின்றனர். இப்படி சர்ச்சையில் சிக்குவது விநாயகத்திற்கு முதன் முறையல்ல. 

2023 ஆம் ஆண்டு கேரளாவின் முதலமைச்சர் ஓமன் சாண்டியை பேஸ்புக் லைவ் இவர் திட்டி தீர்த்தார். இதனால் இவருக்கு கொலை மிரட்டல்கள் கூட விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கடுத்து கொச்சி காவல் நிலையத்தில் பிரச்சினை செய்த காரணத்திற்காக இவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு இப்போது பெயில் கிடைத்து, வெளியில் இருக்கிறார். 

கடந்த ஆண்டும், ஹைதராபாத் விமான நிலையத்தில் இவர் குடித்துவிட்டு செய்த ரகளையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இப்படி தொடர்ந்து சர்ச்சைக்கு மேல் சர்ச்சையில் சிக்கிய அவர், இப்போதும் இது போன்ற ஒரு பிரச்சனையில் அவர் மாட்டியிருக்கிறார்.

வருத்தம் தெரிவித்தார்:

இந்த பிரச்சனையில் விநாயகன், வருத்தம் தெரிவித்து ஒரு பதிவை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில், “ஒரு நடிகராகவும் ஒரு மனிதராகவும் என்னால் பல விஷயங்களை கையாள முடியவில்லை. இதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | ஓவியா to த்ரிஷா..வீடியோ லீக் சர்ச்சையில் சிக்கிய தமிழ் நாயகிகள்! லிஸ்ட் பெருசு..

 

மேலும் படிக்க | ஜெயிலர் பட வில்லன் விநாயகன் கைது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News