தமிழக பட்ஜெட் 2025: இந்த 3 நாள்களுக்கு கருத்துக் கேட்புக் கூட்டம்; இதனால் என்ன பயன்?

Tamil Nadu Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் தலைமை செயலகத்தில் இருந்து நாளை (பிப். 18) முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் 2025-26ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பட்ஜெட் மீது மக்கள் தரப்பில் இருந்தும், அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்தும், அமைப்புகள் தரப்பில் இருந்தும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

1 /8

மத்திய பட்ஜெட் (Union Budget 2025) கடந்த பிப். 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்த நிலையில், அடுத்தடுத்து மாநில அளவிலும் அந்தந்த மாநில சட்டமன்றங்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

2 /8

வரும் மார்ச் முதல் வாரம் 2025-26 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் (Tamil Nadu Budget 2025) தாக்கல் செய்யப்பட இருக்கிறது. கடந்தாண்டை போலவே தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

3 /8

பொது பட்ஜெட்டை 2025 தொடர்ந்து, வேளாண் பட்ஜெட் 2025 (TN Agriculture Budget 2025) எம்ஆர்கே பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் சார்ந்து பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன. 

4 /8

பட்ஜெட் மீது மக்கள் தரப்பில் இருந்தும், அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்தும், அமைப்புகள் தரப்பில் இருந்தும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. மக்களை பொறுத்தவரையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் (Kalaignar Magalir Urimmai Thogai Thittam) ரொக்கம் அதிகப்படுத்துதல் தொடங்கி பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை எதிர்பார்க்கின்றனர்

5 /8

அதேபோல், பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் கொண்டுவர வேண்டும் என அரசு ஊழியர்கள் தரப்பில் கடுமையாக கோரிக்கை வைக்கப்படுகிறது. இதைபோல், பல்வேறு அமைப்புகளுக்கும் துறை சார்ந்த எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

6 /8

தமிழ்நாடு அரசு பட்ஜெட் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் தலைமை செயலகத்தில் இருந்து நாளை (பிப். 18) தொடங்குகிறது. நாளை முதல் மூன்று நாள்களுக்கு தலைமைச் செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

7 /8

இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் அனைத்து துறைகளிலும் கருத்துக் கேட்கப்படும். இதில் அந்தந்த துறை சார்ந்த அமைப்புகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கும்.

8 /8

வரும் பிப். 19ஆம் தேதி வணிக வரித்துறை சார்பிலான அமைப்புகளும் மற்றும் 20ஆம் தேதி சிறு, குறு, நடுத்தர தொழில்துறை சார்பிலான அமைப்புகளும் இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்கின்றன. இந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தின் மூலம் துறை சார்ந்த தேவைகளும், எதிர்பார்ப்புகளும் என்னென்ன என்பது விரிவாக தெரியவரும்.