First Indian Actress To Get 1 Crore Salary : இந்தியாவில் பிரபல நட்சத்திரமாக ஜொலித்த ஒரு தமிழ் நடிகைதான், முதன் முதலாக 1 கோடி சமபளமாக பெற்ற நடிகையாம். அவர் யார் தெரியுமா?
First Indian Actress To Get 1 Crore Salary : இந்தியாவின் பிரபல நட்சத்திரமாக திகழ்ந்த ஒரு தமிழ் நடிகைதான் முதன் முதலாக ரூ.1 கோடியை சம்பளமாக பெற்றவர். தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். அந்த மொழிகளில் ஸ்டார் நடிகர்களாக திகழ்ந்த அனைவருக்கும் பல படங்களில் ஜோடியாக திரையில் தோன்றியிருக்கிறார். இப்போது அந்த நடிகை உயிருடன் இல்லை என்றாலும் அவரது அருமை பெருமைகளை இன்னும் நாம் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். அந்த நடிகை எந்த ஆண்டில், எந்த படத்திற்காக முதன் முதலில் 1 கோடி சம்பளம் வாங்கினார், அவர் யார் என்பது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
இந்த காலத்திலேயே நடிகர்களுக்கு இணையாக நடிகைகள் சம்பளம் வாங்குவதில்லை. அதிலும், இந்திய திரையுலகை பொருத்தவரை, நடிகர்களுக்கு இணையாக எந்த நடிகையும் சம்பளம் பெறுவதில்லை. ஆனால், 90களிலேயே ஒரு நடிகை ஒரு படத்திற்கு ரூ.1 கோடியை சம்பளமாக பெற்றார். அவர் யார் தெரியுமா?
அந்த நடிகை வேறு யாருமில்லை, ஸ்ரீதேவிதான். ஸ்ரீதேவி, சிவகாசிக்கு அருகே உள்ள மீனாம்பட்டி எனும் இடத்தில், 1963ஆம் ஆண்டு பிறந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், அதன் பின்பு வளர்ந்தவுடன் பெரிய இயக்குநர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார்.
ஸ்ரீதேவிதான், இந்தியாவில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகைய் ஆவார். 1993ஆம் ஆண்டில் வெளியான ரூப் கி ராணி சரோன் கா ராஜா என்ற படத்திற்காக அந்த சம்பளத்தை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பளம் வாங்கும் போது அவருக்கு வெறும் 30 வயதுதான். அதுவும், அந்த 90 காலக்கட்டஙளில் பெரிதாக வேறு எந்த ஆண் நடிகரும் கூட அப்படியெல்லாம் சம்பளம் வாங்கவில்லையாம்.
ஆனால், அந்த படத்தில் நடித்த சில மாதங்களிலேயே அவர், சினிமாவை விட்டு விலகிவிட்டார். அதன் பிறகு, முதுமை கொஞ்சம் எட்டிப்பார்க்க ஆரம்பித்த பின்புதான் மீண்டும் திரையுலகிற்கு வந்தார்.
ஸ்ரீதேவி, 2018ஆம் ஆண்டு தனது சகோதரி மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய்க்கு சென்றிருந்தார். அங்கு, இரவு ஓட்டலில் தங்கியிருந்த போது பாத் டப்பில் மாரடைப்பு ஏற்பட்டு மூழ்கி உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
ஸ்ரீதேவி உயிரிழந்து இத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும், அவர் பற்றிய பெருமைகளை இன்னும் பெரிய அளவில் பேசி வருகிறோம்.