இளம் வயதில் பணக்காரர் ஆக விரும்பினால் முதலில், பணத்தை சேமித்து, சரியான இடத்தில் முதலீடு செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று முதியவர்கள் அறிவுரை கூறுவதை நாம் கேட்டிருப்போம். சிறந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் பணத்தை பன்மடங்காக்கும்.
முதலீட்டு விஷயத்தில், நீண்ட கால திட்டங்கள் மூலம் தான் பணத்தை பன்மடங்காக்க உதவும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களில் எவ்வளவு காலம் அதிகமாக தொடர் முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு அதிக பணம் கிடைக்கும்.
பணக்காரர் ஆகும் கனவை நனவாக்க, அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. வருமானத்தை அள்ளித் தரும் திட்டங்களின் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது பலன் தரும். குறிப்பாக கூட்டு வட்டியின் பலனைக் கொடுக்கும் திட்டங்கள் ஆயிரங்களை லட்சங்களாக பெருக்கும்.
வட்டி இரண்டு வழிகளில் கிடைக்கும். எளிய வட்டி மற்றும் கூட்டு வட்டி. எளிய வட்டியில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அசல் தொகைக்கு மட்டுமே வட்டி கிடைக்கும். ஆனால் கூட்டு வட்டியில், அசல் தொகை மற்றும் அத்ன் மூலம் கிடைக்கும் வட்டியின் மீதான வட்டியை பெறுவீர்கள்.
கூட்டு வட்டியின் பலனால், காரணமாக உங்கள் முதலீடு வேகமாக இரட்டிப்பாகவும் மும்மடங்காகவும் அதிகரிக்கிறது. நீண்ட காலத் முதலீட்டில், கூட்டு வட்டி மூலம் பெரிய அளவில் நிதி திரட்ட முடியும். கூட்டு வட்டியின் பலனைக் கொடுக்கும் சில திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் எந்தவொரு இந்திய குடிமகனும் முதலீடு செய்யலாம். இது பாதுகாப்பான வரி சேமிப்பு மற்றும் முதலீட்டு வழிமுறையாக கருதப்படுகிறது. PPF இல் நீண்ட கால முதலீட்டில் கூட்டும் பலன் கிடைக்கும். தற்போது, பிபிஎஃப் மீதான வட்டி 7.1 சதவீதம் என்ற அளவில் உள்ளது. PPF திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். ஆனால் அதை 5 ஆண்டுகளில் அதிகரிப்பதன் மூலம், உங்கள் முதலீட்டை தொடரலாம். ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்தை டெபாசிட் செய்து, திட்டத்தை நீட்டித்து 25 ஆண்டுகள் தொடர்ந்தால், நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி.
SIP மூலம் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யப்படுகிறது, SIP இல் எவ்வளவு காலம் முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக நீங்கள் கூட்டு வட்டியின் பலனை பெற முடியும். சந்தையில் நேரடியாக பங்குகளில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள், குறைந்த ரிஸ்க் கொண்ட எஸ்ஐபியில் முதலீடு செய்யலாம். SIP மூலம் கிடைக்கும் வருடாந்திர வருமானம் சராசரியாக 12 சதவீதம் வரை இருக்கும். சில நேரங்களில் 15 சதவிகிதம் வரை பெறலாம். நீண்ட கால எஸ்ஐபி மூலம் எளிதில் கோடீஸ்வரர் ஆகலாம்.
EPF என்பது பணியில் இருப்பவர்களுக்கான கட்டாய, அதே சமயத்தில் ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாகும். சிறந்த ஓய்வூதிய திட்டமான EPF திட்டத்தில் கூட்டு வட்டியின் பலனையும் பெறுவீர்கள். மேலும், மற்ற சேமிப்பு திட்டங்களை விட இதற்கு கிடைக்கும் வட்டி அதிகம். தற்போது, பிஎஃப் மீதான வட்டி 8.25%. நீங்கள் EPF திட்டத்தில் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதம் மட்டுமே பங்களிக்க முடியும். ஆனால் நீங்கள் VPF மூலம் இந்த பங்களிப்பை அதிகரிக்கலாம்.
VPF விருப்பத்தைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பையும் EPFO வழங்குகிறது. இதன் மூலம் PFல் உங்கள் பங்களிப்பை அதிகரிக்கலாம். ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 100 சதவீதம் வரை VPF இல் முதலீடு செய்யலாம் மற்றும் நீண்ட காலத்திற்கு நல்ல செல்வத்தை சேர்க்கலாம். EPF மூலம் கிடைக்கும் அதே வட்டியை VPF வழங்குகிறது, அதாவது, இந்த முதலீட்டில் 8.25% வட்டியை பெறலாம். தவிர, வரிச் சலுகைகளையும் பெறலாம்.
நிலையான வைப்பு நிதியில் மொத்த தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் கூட்டு வட்டியை பெறலாம். இது பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. FD வங்கி அல்லது தபால் நிலையங்களில் எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். இதற்கு கிடைக்கும் வட்டி விகிதமும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடும். பல்வேறு இடங்களில் உள்ள வட்டி விகிதங்களைப் பார்த்த பிறகு எங்கு முதலீடு செய்வது என்று முடிவு செய்யலாம்.