ஒரே இரவில் வீட்டிலேயே பேன், பொடுகு, ஈரை ஒழித்துக்கட்ட..இந்த இரண்டுப் பொருள் மட்டும்போதும்!

Dandruff And Lice Treatment: இந்த இரண்டின் கலவையைத் தினசரி பயன்படுத்துவதன் மூலம், பேன் மற்றும் பொடுகைக் குறைத்து, ஆரோக்கியமான தோல் மற்றும் முடி பெற முடியும். எளிதில் கிடைக்கும் இந்த இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி, வீட்டிலேயே உங்கள் தோலின் பிரச்சனைகளைத் தீர்ப்பது எப்படி என்பதை இங்கு தெரிந்துகொள்வோம். 

 

Get Rid Of Dandruff: வீட்டில் உள்ள இந்த இரு பொருட்கள் பயன்படுத்தி பேன், பொடுகு மற்றும் ஈரை எளிதாக ஒழிக்கலாம். இந்தப் பொருளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கி தன்மைகள் தலையில் உள்ள கிருமிகளை அழித்து சுத்தம் செய்ய உதவுகின்றன. மேலும் இவை இரண்டும் வீட்டில் பயன்படுத்தி எளிதாக ஒரே நாளில் பொடுகு, பேன் மற்றும் ஈர் அனைத்தும் காணாமல் போய்விடும். 

 

1 /9

பூண்டு மற்றும் எலுமிச்சை(Garlic and lemon): இந்த இரண்டுப் பொருள் இருந்தால்போதும்..வீட்டிலேயே பேன், பொடுகு, ஈரை எளிதாக ஒழித்துக்கட்டலாம். வாருங்கள் பார்ப்போம் எப்படிச் செய்தால் தீர்வு கிடைக்கும் என்று..

2 /9

பூண்டு மற்றும் எலுமிச்சையின் நன்மைகள்(Garlic and lemon Benefits): பூண்டு மற்றும் எலுமிச்சை ஆகிய இரண்டு பொருட்களும் தலையில் இருக்கும் பேன், ஈரை ஆரோக்கியமாக ஒழுக்கலாம். மேலும் இவை பல நன்மைகளைத் தருகின்றன. தோலின் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

3 /9

தேவையான  பொருட்கள்(Necessary materials): எலுமிச்சை ஒன்று, 4 பல் பூண்டு. பூண்டை நன்றாக நசுக்கி, பிறகு அதில் எலுமிச்சை பிளிந்துவிட்டு நன்றாகக் கலக்கவும். இரண்டும் கலவையான பிறகு உச்சந்தலையின் வேரில் தடவவும். இதுபோன்று உச்சந்தலையில் அனைத்து இடத்திலும் தடவிவிட்டுத் தூங்கலாம். அல்லது 1-2 மணி நேரம் கழித்தும் கழுவலாம். நீங்கள் தினமும் பயன்படுத்தும் சாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்தி தலையை நன்றாகக் கழுவ வேண்டும். பிறகு தலைமுடியை ஒரு துண்டில் வைத்து உச்சந்தலையில் தேய்க்கவும். அந்தவகையில் உங்கள் பேன், ஈர் அனைத்தும் டவளில் வந்துவிடும். மேலும் நீங்கள் தலை குளிக்கும்போதும் அனைத்துமே நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது. 

4 /9

பேன் மற்றும் பொடுகு ஒழித்தல்(Eliminates dandruff and Lice): பூண்டு மற்றும் எலுமிச்சை இரண்டும் பொடுகு மற்றும் ஈரினை மொத்தமாகத் தீர்த்துக்கட்டும் முக்கிய மூலமாகச் செயல்படுகிறது. இந்த இரண்டின் கலவை உங்கள் உச்சந்தலையைப் பராமரித்து பேன், ஈர் வராமல் இருக்கப் பாதுகாப்பு அளிக்கிறது. 

5 /9

முடி உதிர்தல் உதிர்வைத் தடுப்பது(Prevention of hair fall): பூண்டு மற்றும் எலுமிச்சை பயன்படுத்தி தலைமுடி உதிர்வைத் தடுப்பதற்கும் வலுவான மற்றும் ஆரோக்கியமான தலைமுடி வளரச்செய்யும் என்று கூறப்படுகிறது.     

6 /9

தோல் மற்றும் முடி ஆரோக்கியம்: பூண்டு மற்றும் எலுமிச்சை கலவையைத் தலையில் பயன்படுத்தலாம். இவை எளிதில் பேன், பொடுகு, ஈரை குறைத்துவிடும். இந்த இரண்டிலும் உள்ள ஆன்டி-ஃபங்கி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை தோல் மற்றும் முடி பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது. 

7 /9

பூண்டு மற்றும் எலுமிச்சை பயன்பாடு(Uses of Garlic and Lemon): பூண்டின் அண்டி-பாக்டீரியல் தன்மைகள் மற்றும் எலுமிச்சையின் விசேஷ அமிலங்கள், தலையைச் சுத்தப்படுத்தி, பொடுகு, பேன் மற்றும் ஈரை மொத்தமாக ஒழிக்கச் செய்கிறது.     

8 /9

மூலிகை சக்தி(Herbal power): பூண்டு மற்றும் எலுமிச்சை போன்ற இயற்கைப் பொருட்கள், வித்தியாசமான ஆரோக்கிய பயன்களை வழங்குவதுடன், உங்கள் தலை முடியைப் பாதுகாக்கவும், தலைமுடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கவும் உதவுகின்றன.

9 /9

தீர்வுகள்(solutions): இந்த இயற்கைப் பொருட்கள் வீட்டிலேயே எளிதில் கிடைக்கும் மற்றும் எளிதாகத் தலைமுடியைப் பராமரிக்க பயன்படுத்தலாம். இவற்றின் மூலம், அதிக செலவின்றி உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.