Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குட் நியூஸ் கொடுத்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaingar Magalir Urimai Thogai) விரிவாக்கம் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு இந்தியாவிலேயே முன்னோடித் திட்டமாக பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் பயனாளிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் இப்போது சுமார் 1.15 கோடி பெண்கள் பயனாளிகளாக இருக்கின்றனர். அதேநேரத்தில் தகுதியுள்ள பெண்கள் இன்னும் சில லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாமல் உள்ளனர். அவர்கள் இந்த திட்டத்தில்சேர வேண்டும் என நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர்.
அவர்களுக்காக ஒரு குட் நியூஸ் ஒன்றை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அந்த குட் நியூஸ் என்னவென்றால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இன்னும் 3 மாதங்களில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக கூறியுள்ளார். அப்போது தகுதியுள்ள மகளிர் அனைவரும் இந்த திட்டத்தின் பயனாளிகளாக சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
அதனால் இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் விரைவில் இந்த திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் பெற முடியும். அனைத்து மகளிருக்கும் கிடைக்குமா என்றால் இல்லை. ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்களில் தகுதி வாய்ந்தவர்களை மட்டும் அந்தந்தப பகுதிகளில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து பயனாளிகளை தேர்வு செய்வார்கள்.
நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கக்கூடாது, 10 ஏக்கருக்கும் மிகாமல் புன்செய் நிலங்கள், 5 ஏக்கருக்கு மிகாமல் நன்செய் நிலங்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே பயனாளிகளாக சேர முடியும். ஒரு ரேஷன் கார்டில் பெயர் இருப்பவர்களில் யாரும் அரசு கொடுக்கும் மாதாந்திர ஓய்வூதிய பயனாளிகளாக இருக்கக்கூடாது. ஜிஎஸ்டி மற்றும் வருமான வரியை 2.50 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டி செலுத்துபவர்களாகவும் இருக்கக்கூடாது.
இதுதவிர இன்னும் சில விதிமுறைகளும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதை எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இதன்மூலம் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும், தகுதியில்லாதவர்கள் விண்ணப்பிக்காமலும் இருக்கலாம்.
அதேபோல், தண்டுவட நோய் உள்ளிட்ட கொடிய நோய்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அரசின் வேறு எந்த திட்டத்தில் பயன்பெற்றாலும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
குடும்பம் திருநங்கைகள் தலைமையில் இருந்தால் அவர்களும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் 21 வயது பூர்த்தியடைந்த பெண்கள் இருந்தால் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.