எச்சரிக்கை.... இந்த உணவுகள் புற்றுநோயை வரவழைக்கும் ஆபத்தை கொண்டவை

இன்றைய நவீன வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ஆகியவை காரணமாக உடல் நோய்களின் கூடாரமாக மாறிவிட்டது. நீரழிவு நோய் முதல் புற்று நோய் வரை நாள்தோறும் பலவித நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

புற்றுநோய் உடல் பெரும் வலியையும் வேதனையையும் தருவதோடு, அதற்கான சிகிச்சையும் கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனால், வாழ்க்கையின் தடமே மேறிப் போகும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, புற்றுநோய் அபாயத்தை பெருமளவு அதிகரிக்கும் உணவுகளை அறிந்து கொண்டால், அதன தவிர்த்து ஆரோக்கியமாக வாழலாம். 

1 /8

புற்றுநோய் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. மோசமான வாழ்க்கை முறை, பரம்பரை காரணம் என்று பல காரணங்கள் இருந்தாலும், நாம் உண்ணும் உணவுகளும் புற்றுநோய் காண முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் உணவுகளை அறிந்து கொள்ளலாம்.

2 /8

வெள்ளை சர்க்கரை: நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரை ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு. கரும்பிலிருந்து எடுக்கப்படும் இந்த சர்க்கரையை வெள்ளை நிறமாக மாற்ற பல வித ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

3 /8

பதப்படுத்தப்பட்ட உணவுகள்: உணவுகள் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்க அதில் சேர்க்கப்படும் ரசாயனங்கள், புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று என்று உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

4 /8

சோடா மற்றும் கரிய அமிலம் சேர்த்த பானங்கள்: கொக்கோகோலா போன்ற காரியம் இளம் சேர்த்த பானங்களில் வெள்ளை சர்க்கரையுடன், அதைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சோள சர்க்கரையும் சேர்க்கப்படுகிறது. இதுவும் புற்றுநோய்க்கான முக்கிய காரணிகள் ஒன்று என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

5 /8

சுத்திகரிக்கப்பட்ட மாவு வகைகள் மைதா மற்றும் ரெடிமிக்ஸ் மாவு வகைகள் ஆகியவற்றில் காஸ்டிக் சோடா, ப்ரோமைட் போன்ற ரசாயனங்கள் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இவை உணவிற்கு சுவையை கொடுத்தாலும், ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு.

6 /8

பண்ணை மீன்கள்: தொட்டி அல்லது குட்டையில் வளர்க்கப்படும் மீன்களுக்கு தொற்று நோய் ஏற்படாமல் இருக்க ஊசி போடப்படுகிறது. அதோடு நீரிலும் பூச்சிக் கொல்லிகள் கலக்கப்படுகின்றன. மேலும் இதில், ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் குறைவாகவே இருக்கும். கடல் மீன் தான் ஆரோக்கியமான உணவு.

7 /8

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தயாரிப்பிலும், எண்ணெயில் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கவும் சேர்க்கப்படும் ரசாயனங்கள், ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு. முடிந்தவரை செக்கில் ஆட்டிய எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவது நல்லது.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.