மகா சிவராத்திரி 2025: 60 வருடத்திற்கு பின் அரிய நிகழ்வு... இந்த 3 ராசிகளுக்கு பெரிய லக்

Maha Shivaratri 2025: ஜோதிடத்தின்படி, 60 ஆண்டுகளுக்கு பிறகு மகா சிவராத்திரி அன்று அரிய நிகழ்வு ஒன்று நடக்கிறது. இதனால், இந்த 3 ராசிக்காரர்களுக்கு என கூறப்படுகிறது. அந்த 3 ராசிகள் யார் என்பதை இங்கு காணலாம்.

Maha Shivaratri 2025, Luck For 3 Zodiac Signs: மகா சிவராத்திரி அன்று சிவ பெருமானை நோக்கி இரவு முழுவதும் பக்தர்கள் வழிபாடு செய்வார்கள். இரவு முழுவதும் தூங்காமல் இருந்து சிவனை வழிபாடு செய்வதால் பல நன்மைகள் தேடி வரும். இந்தாண்டு பிப். 26ஆம் தேதி மகா சிவராத்திரி வருகிறது.

 

1 /8

மகா சிவராத்திரி (Maha Shivaratri 2025) இந்தாண்டு பிப்.26ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. சிவ பெருமானம் மற்றும் பார்வதி தேவிக்கு உகந்த நாளாக அது பார்க்கப்படுகிறது.  

2 /8

ஜோதிடத்தின்படி, இந்தாண்டு மகா சிவராத்திரிக்கு அரிய நிகழ்வு ஒன்று நடக்க உள்ளதாக கணிக்கப்படுகிறது. 60 ஆண்டுகளுக்கு பிறகு அவிட்ட நட்சத்திரத்தில் மகா சிவராத்திரி வருகிறது. பரிகம் யோகம், சகுனி கரணம் ஆகியவை வருகிறது. மகரத்தில் சந்திரன் அமர்ந்திருப்பார்.

3 /8

இந்த அரிய நிகழ்வின்போது இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் (Luck For 3 Zodiac Signs) அதிகரிக்கும் என ஜோதிடர்கள் கணிக்கின்றனர்.

4 /8

அந்த வகையில், இந்த அரிய நிகழ்வால் மகா சிவராத்திரியை முன்னிட்டு அதிர்ஷ்டத்தை பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இங்கு அறியலாம்.

5 /8

மேஷம் (Aries): இந்தாண்டு மகா சிவராத்திரி இந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலத்தின் தொடக்கமாக இருக்கும். நீங்கள் நினைத்த காரியம் எல்லாம் நடைபெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவும் கட்டுக்குள் இருக்கும். இதனை தவிர்த்து நீங்கள் நீண்ட காலமாக ஆசைப்பட்ட வேலையும் கிடைக்கும். நல்ல பதவியையும், மதிப்பையும் பெறுவீர்கள். பணியிடத்தில் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். 

6 /8

மிதுனம் (Gemini): இந்த மகா சிவராத்திரியால் உங்களது பொருளாதார நிலை வலுவாகும். பணம் சார்ந்த வேலையில் உங்களுக்கு வெற்றி தேடி வரும். காதல் உறவும் இனிமையானதாக மாறும். திருமண உறவு சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் பொருளாதார பலன்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும் பண வரவுக்கான வாய்ப்புள்ளது. பணப் பிரச்னைகளில் இருந்து விடுபட்டு மன நிம்மதியை பெறுவீர்கள்.

7 /8

சிம்மம் (Leo): மகா சிவராத்திரி இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டுவரும். சிறப்பான லாபத்தை தொழில் செய்வோர் பெறுவார்கள். அதாவது தொழில் செய்பவர்கள் செய்த முதலீட்டில் இருந்து இரட்டிப்பு லாபத்தை பெறுவீர்கள். நீண்ட நாள்களாக இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வராமல் இருக்கும் பணமும் உங்களுக்கு வந்து சேரும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துகள் மற்றும் ஜோதிட கணிப்புகள் சார்ந்து எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை.