டாடா புகழ் இயக்குநர் கணேஷ் K பாபு கதையில் உருவாகும் புதிய படம்!

Dark Movie First Look: MG STUDIOS & FiveStar தயாரிப்பில், டாடா இயக்குநர் கணேஷ் K பாபு கதையில் உருவாகியுள்ள “டார்க்”  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

1 /6

MG STUDIOS சார்பில் தயாரிப்பாளர் APV. மாறன் மற்றும் FiveStar நிறுவனம் சார்பில் செந்தில் ஆகியோருடன் இணைந்து டாடா புகழ் இயக்குநர் கணேஷ் K பாபு, கதை எழுதி தயாரிக்க, இயக்குநர் கல்யாண் K ஜெகன் திரைக்கதை, இயக்கத்தில் அறிமுக நடிகர் அஜய் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “டார்க்” திரைப்படத்தின், அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

2 /6

இளைஞன் ஒருவனுக்கு ஏற்படும் அமானுஷ்ய விசயங்களும் அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும்  தான் இப்படத்தின் கதை. ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும், அதிரடி திருப்பங்களுடன் கூடிய சைக்கலாஜிகல் ஹாரர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

3 /6

காமெடி பேய்ப்படங்களுக்கு மத்தியில், மாறுபட்ட களத்தில் ஒரு அதிரடியான அனுபவம் தரும் படமாக,  இப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் கல்யாண் K ஜெகன்.

4 /6

அஜய் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகியுள்ள இப்படத்தில், நடிகர் நேத்திரன் மகள் அஞ்சனா நாயகியாக நடித்துள்ளார். நட்டி நட்ராஜ் , இயக்குநர் கே. பாக்யராஜ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் VTV கணேஷ், இந்துமதி, சிபி ஜெயக்குமார், அர்விந்த் ஜானகிராமன் ஆகியோர் இணைந்து  நடித்துள்ளனர்.

5 /6

பெரும் பொருட்செலவில் புதுமையான படைப்பாக, பல வெற்றிப்படங்களைத் தந்த FiveStar நிறுவனம் சார்பில் MG STUDIOS APV. மாறன் டாடா புகழ் இயக்குநர் கணேஷ் K பாபு இணைந்து தயாரித்துள்ளனர்.      

6 /6

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், படத்தினை திரைக்கு கொண்டு வரும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், விரைவில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.