Saturn Sun Conjunction: சூரிய பெயர்ச்சி ஏற்படும் போது தமிழ் மாதம் பிறக்கிறது.அந்த வகையில், மாசி மாத பிறப்பில் ஏற்படும் சூரிய பெயர்ச்சியினால் கும்ப ராசியில் ஏற்படும் சனி சூரிய பகவான் சேர்க்கை சில ராசிகளுக்கு பிரச்சனைகளையும் சிக்கல்களையும் ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
கிரகங்களின் ராஜாவான சூரியன், மகர ராசியில் இருந்து விலகி, கும்ப ராசியில் பெயர்ச்சியாகும் நிலையில், நீதிகடவுளான சனீஸ்வரர் கும்ப ராசியில் இருப்பதால் சூரியன் - சனி ஆகிய இரு கிரகங்களும் இணைவார்கள். இது சில ராசிகளுக்கு சிக்கல்களைக் கொடுக்கும்.
சூரியன் - சனி இணைவு: சனி பகவானுக்கும், சூரியனுக்கும் இடையே பகை உணர்வு இருக்கும் நிலையில், மாசி மாதத்தில், இரண்டு கிரகங்களுக்கு இடையே ஏற்படும் இணைவினால், சில ராசிகளுக்கு அசுப பலன்கள் கிடைக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
சூரிய பகவான் பிப்ரவரி 13ம் தேதி தனது மகன் சனிதேவரின் ராசியான கும்ப ராசிக்குள் நுழைகிறார். சூரிய பகவான் கும்ப ராசிக்குள் சனி நுழைந்தவுடன் சூரியனின் பிரகாசம் குறையத் தொடங்கும் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.
சூரிய பகவான் பிப்ரவரி 13ம் தேதி தனது மகன் சனிதேவரின் ராசியான கும்ப ராசிக்குள் நுழைகிறார். சூரிய பகவான் கும்ப ராசிக்குள் சனி நுழைந்தவுடன் சூரியனின் பிரகாசம் குறையத் தொடங்கும் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.
சிம்மம்: சூரியனும் சனிபகவானும் இணையும் போது சிம்ம ராசிக்காரர்களுக்கு செலவுகள் கூடும். நிதி இழப்பு ஏற்படலாம். வியாபாரத்தில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். கடுமையான நோய்கள் ஏற்படலாம். நோய்களுக்கான சிகிச்சைக்காக பணம் செலவிடப்படலாம். இந்த நேரத்தில் விபத்துகளில் சிக்காமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்: சூரியன் மற்றும் சனிபகவான் இணைந்த காலத்தில், துலாம் ராசிக்காரர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். செலவுகள் கூடும். இந்த நேரத்தில், வேலையில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். உங்கள் மனைவியுடன் தகராறு ஏற்படலாம். உறவுகளில் ஈகோ தவிர்க்கப்பட வேண்டும்.
மகரம்: சூரியன் மற்றும் சனி பகவான் இணையும் காலத்தில்,மகர ராசிக்காரர்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகலாம். பணச் சேமிப்பு குறையலாம். நிதி நிலை பலவீனமடையலாம். இதனால், மன அழுர்த்தம் அதிகரிக்கலாம்.
கும்பம்: சூரியனும் சனிபகவானும் இணையும் காலத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வரலாம். உத்தியோகத்தில் உத்தியோகஸ்தர்களின் அழுத்தம் கூடும். செலவுகள் அதிகரிக்கலாம், அதன் காரணமாக பொருளாதார சமநிலை மோசமடையலாம்.
மீனம்: சூரியனும் சனிபகவானும் இணையும் காலத்தில் மீன ராசிக்காரர்களுக்கு திடீர் செலவுகள் கூடும். உடல்நிலை மோசமடையலாம். இந்தக் காலக்கட்டத்தில், உங்கள் பணம் சிக்கியிருக்கும் வேறு யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். இந்த நேரத்தில் நீங்கள் அதிக மன அழுத்தத்தில் இருக்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.