Pregnancy guidelines | நீலகிரி மாவட்டத்தில் கர்ப்பிணிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
Pregnancy guidelines, Nilgiris | நீலகிரி மாவட்டத்தில் சிசுமரணத்தை குறைப்பதற்கும், மகப்பேறு மரணத்தைதடுப்பதற்கும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முழு விவரம்...
பெண்கள் கர்ப்பம் உறுதி செய்தவுடன், கர்ப்பத்தை சுயமாகவோ அல்லது அருகிலுள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கோ சென்று 12 வாரங்களுக்குள் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
போலிக் அமிலமாத்திரைகளை 3 மாதங்கள் வரை, தினமும் ஒருமாத்திரை கட்டாயமாக எடுத்துக்கொள்ளவேண்டும். இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. இரணஜன்னி தடுப்பூசிகள் இரு முறை ஒருமாத இடைவெளியில் செலுத்திக் கொள்ள வேண்டும். ஆய்வக பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை ஒருமுறையாவது 12 வாரங்களுக்குள் செய்திருக்க வேண்டும்.
4 மாதம் முதல் இரும்புச்சத்து மாத்திரைகள் உட்கொள்ளவேண்டும். குடற்புழு நீக்கமாத்திரை 4 மாதம் முடிவில் ஒருமுறைமட்டும் உட்கொள்ள வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் சத்தான உணவு உட்கொள்ளவேண்டும். ஒருநாளைக்கு 2 முதல் 3 லிட்டர் வரைகாய்ச்சி ஆற வைத்த குடிநீரை பருகவேண்டும்.
சிக்கலான கர்ப்பிணித் தாய்மார்கள் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தை அணுக அங்குள்ள மருத்துவரின் ஆலோசனையின்படி தக்க நேரங்களில் தவறாமல் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளவேண்டும். சிக்கலான கர்ப்பிணித் தாய்மார்கள் தங்கள் எதிர்பார்க்கப்படும் பிரசவதேதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
பிரசவித்ததாய்மார்கள் கடைபிடிக்கவேண்டியவைகள்: பிரசவத்திற்குபிள் உள்ள காலத்தில் சத்தான உணவு உட்கொள்ளவேண்டும். 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் பருகவேண்டும்.
பிரசவித்த தாய்மார்கள் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல் வேண்டும். இது ஆழ் சிரை இரத்தஉறைவை (DVT-Deep Vein Thrombosis) தடுக்கஉதவுகிறது. போதுமான அளவு ஓய்வு எடுக்கவேண்டும்.
தினமும் 6 முதல் 8 மணிநேர உறக்கம் அவசியமானது. குழந்தைக்கு 2 மணிநேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுப்பது சிறந்தது. குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
6 மாதங்களுக்கு பிறகு தாய்ப்பால் தருவது மட்டுமல்லாமல் எளிதாக விழுங்கக் கூடிய குழந்தை உணவு கொடுக்க ஆரம்பிக்கவேண்டும். 2 வயது முடியும் வரை தாய்ப்பால் தருதல் அவசியம். கர்ப்பக்காலத்திலும் பிரசவத்திற்கு பின்னுள்ள காலங்களிலும் சுகாதாரமாக இருப்பது அவசியம். பிரசவம் முடிந்தவுடன், பிரசவித்ததாய்மார்கள் இயன்றவரை விரையில் நடத்தல் வேண்டும்.