Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை... வார ராசிபலன்களும்... சில பரிகாரங்களும்

Weekly Horoscope: பிப்ரவரி 17ம் தேதியுடன் துவங்கும் வாரத்தில், சில ராசிகளுக்கு, எதிர்பாராத வகையில் பணம் வர கிடைப்பது போன்ற பல சாதகமான பலன்களைத் தரும் என்றும், அதே சமயம் சில ராசிகள் சிறிது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

வார ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் பிப்ரவரி 17ம் தேதியுடன் துவங்கும் இந்த வாரம் எப்படி இருக்கும் என் ஜோதிடர்கள் கணிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். அனைத்து ராசிகளுக்குமான இந்த வார ராசிபலனையும் பரிகாரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

 

1 /13

மேஷ ராசிக்கான வார பலன்கள்: புதிய நண்பர்கள் கிடைப்பதால் மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். பொருளாதார நிலை உயர்வது மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். தடைகள் விலகுவதால் முன்னேற்றம் ஏற்படும். விக்ணங்களை நீக்கும் விநாயகரை வழிபட எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறலாம்.

2 /13

ரிஷப ராசிக்கான வார பலன்கள் சிக்கல்கள் தீருவதால் மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். உங்களை சார்ந்தவர்களை மகிழ்ச்சியா வைத்துக் கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். உங்கள் திறனை வளர்த்துக் கொள்வதில் வெற்றி பெறுவீர்கள். ஹனுமன் வழிபாடு, சிறந்த பரிகாரமாக செயல்பட்டு, வாழ்க்கையில் மேன்மையை கொண்டு வரும்.

3 /13

மிதுன ராசிக்கான வார பலன்கள் உத்தியோகஸ்தர்கள் சிறிது எச்சரிக்கையுடன் நடப்பது நல்லது. இதனால் வருங்கால சிக்கல்களை தவிர்க்கலாம். முதலீடு செய்யும் போது எச்சரிக்கையாக இருக்கவும். செலவுகள் அதிகரித்து சிறிதுமான உழச்சல் ஏற்படலாம். வீட்டில் தினமும், சாம்பிராணி போடுவதன் மூலம், நேர்மறை ஆற்றலை அதிகரிக்கலாம்.

4 /13

கடக ராசிக்கான வார பலன்கள்: மகிழ்ச்சிகரமான பல சம்பவங்கள் நடந்தேறலாம். செலவுகள் அதிகரித்தாலும், வருமானம் அதிகரிப்பதால் சமாளிப்பதில் பிரச்சனை இருக்காது. உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் மதிப்பை பெறுவார்கள். எதிர்கால முன்னேற்றத்திற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். ராகு கால பூஜை மூலம் வாழ்க்கையில் நல்லது நடக்கும்.

5 /13

சிம்ம ராசிக்கான வார பலன்கள்: மன உறுதியுடன் செயல்படும் தன்மை மூலம், வெற்றிகளை குவிப்பீர்கள். தன வரவு காரணமாக பொருளாதார நிலை மேம்படும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் தங்கள் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய முதலீடுகளுக்கான நல்ல காலகட்டம் இது. வீட்டில் நெய் தீபம் ஏற்றி வருவது, சிறந்த பரிகாரமாக இருக்கும்.

6 /13

கன்னி ராசிக்கான வார பலன்கள்: வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனைகளை சந்தித்தாலும், அதனை எளிதாக கையாளும் திறன் இருக்கும். எதிர்பாராத பணவரவு சற்று மன நிம்மதியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். சமைத்தபடி பணிகளை மேற்கொள்ளலாம். சிவபெருமானை வழிபடுவது, வாழ்க்கையில் இன்னல்களை தீர்க்கும் மருந்தாக இருக்கும்.

7 /13

துலாம் ராசிக்கான வார பலன்கள்: மனதிற்கு உற்சாகம் கிடைக்கும் வகையில், உறவுகள் உங்களைத் தேடி வரும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் சந்திக்கும் சிக்கல்களை எளிதாக தீர்த்து, அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். காரியங்களில் வெற்றி கிடைக்கும். நினைத்தது கை கூட மஞ்சள் அல்லது வெள்ளை நிற ஆடைகளை அணிவது பலன் தரும்.

8 /13

விருச்சிக ராசிக்கான வார பலன்கள்: ஆடம்பர விஷயத்திற்காகவும், ஆடை ஆபரணங்களுக்காகவும் செலவு செய்வீர்கள். பணியில் இருப்பவர்கள் எதிர்பாராத பொறுப்புகளையும் ஆதாயங்களையும் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நண்பர்களின் ஆதரவு இருக்கும். அன்னதானங்கள் செய்வது பல நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும்.

9 /13

தனுசு ராசிக்கான வார பலன்கள்: எதிர்பாராத வகையில் கிடைக்கும் பண வரவு, மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். இல்ல துணையுடன் வாக்குவாதம் செய்யாமல் இருப்பதால் வீட்டில் அமைதி நிலவும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும். ஏழைகளுக்கு உணவு உடை வழங்குவது, வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரும்.

10 /13

மகர ராசிக்கான வாரபலன்கள்: உறவுகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. செலவுகளையும் கட்டுப்படுத்த வேண்டும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இதனால் மன உளைச்சலும் ஏற்படும். அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபடுவதும் அன்னதானங்கள் செய்வதும், கஷ்டங்களை நீக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

11 /13

கும்ப ராசிக்கான வார பலன்கள்: எதிர்கால திட்டங்களை தீட்டுவதில் வெற்றி பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு ஆதாயத்தை பெறுவார்கள். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று, நெய் தீபம் ஏற்றுவதால், தடைகள் அனைத்தும் நீங்கி, வெற்றிகள் எளிதாக கைக்கூடும்.

12 /13

மீன ராசிக்கான வார பலன்கள்: குடும்ப வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. இதனால் வீட்டில் வசதிகள்  பெருகும். தங்க ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. வாகன கனவையும் நிறைவேற்றலாம். முதலீட்டில் எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் அதிகாரிகள் மனதில் இடம் பிடிப்பார்கள். இது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். சிவலிங்கத்திற்கு பால் மற்றும் தேள் கலந்த அபிஷேகம் செய்வது, தடைகளை நீக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

13 /13

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.