புதனும், ராகுவும் மீனத்தில் இணைவதால்... 3 ராசிகளுக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கு

Budhan Rahu Yuti: மீனத்தில் புதன் மற்றும் ராகு இணையும் சூழலில், இந்த 3 ராசிகளுக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது எனலாம். அந்த 3 ராசிகள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.

Budhan Rahu Yuti In Meenam: மீனம் குரு பகவானுக்கு உகந்த ராசியாகும். மீனத்தில் ஏற்கெனவே ராகு உள்ளார். புதன் கிரகம் வரு் பிப். 27ஆம் தேதி மீனத்தில் பெயர்ச்சி ஆகிறது. மீனத்தில் ராகு - புதன் இணைவதால் இந்த 3 ராசிகளுக்கு நன்மை ஆகும்.

1 /8

மீனத்தில் வரும் பிப். 27ஆம் தேதி புதன் கிரகம் (Mercury Tranist In Pisces 2025) பெயர்ச்சி ஆகிறது. மீனத்தில் ஏற்கெனவே ராகு (Rahu) வீற்றிருக்கிறார். மீனத்தில் புதனும், ராகுவும் இணைக்கின்றன.

2 /8

ஜோதிடத்தின் படி, புதன், ராகு பொருள் வரவை ஏற்படுத்தும். மேலும், திடீர் திருப்பங்களை ஏற்படுத்தும். புதன் கிரகம் நுண்ணறிவு, வணிகம், விவேகம் ஆகியவற்றை வழங்கும்.

3 /8

அந்த வகையில், வரும் பிப். 27ஆம் தேதி மீனத்தில் (Pisces) புதனும், ராகுவும் இணைவதால் பல ராசியினரின் வாழ்வில் தாக்கம் ஏற்படும். அதுமட்டுமின்றி மீனம், குரு பகவானுக்கு உகந்த ராசி என்பதும் கவனிக்க வேண்டும்.

4 /8

எனவே, ராகு - புதன் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிகளுக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது எனலாம். அந்த 3 ராசிகள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.

5 /8

ரிஷபம் (Taurus): புதன் - ராகு மீனத்தில் இணைவதால் தொழில்நுட்பம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு பெரிய நன்மைகள் வர உள்ளன. இந்த காலக்டத்தில் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொண்டு வருங்காலத்திற்கு உங்களை தயார்படுத்திக்கொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து உங்களுக்கு ஏற்ற, பிடித்த வேலைவாய்ப்பு கிடைக்கும். உங்கள் அண்ணன், அக்கா ஆகியோர் மூலம் பெரிய உதவி கிடைக்கும். பொருளாதாரமும் மேம்படும்.

6 /8

விருச்சிகம் (Scorpio): ஜோதிடம் மற்றும் அறிவியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு பெரிய வெற்றி வாய்ப்பு காத்திருக்கிறது. பணி சார்ந்த வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நீண்ட நாளாக வேறு வேலைக்கு மாற வேண்டும் என நினைப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும், மன அமைதியை பெறுவீர்கள்.

7 /8

கும்பம் (Aquarius): எந்த துறையில் இருந்தாலும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பெரிய முன்னேற்றம் காத்திருக்கிறது. வணிகர்களுக்கு நீண்ட நாளாக தேங்கியிருந்த வேலைகள் முடிவடைந்து, அதன்மூலம் செல்வத்தை ஈட்டுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்தும் நன்மை உண்டாகும். முன்பின் தெரியாத நபரை சந்தித்து அவர் மூலம் புதிதான ஒன்றை கற்கும் வாய்ப்புகள் உருவாகும். குடும்ப உறவில் நிம்மதி கிடைக்கும். எதிர்பார்க்காத லாபம் வந்து சேரும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.