பட்ஜெட்டுக்கு முன்னதாக தமிழக அரசு புதிய அறிவிப்பு.. 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!

Tamil Nadu Budget Latest Update: தமிழ்நாடு பட்ஜெட் 2025 குறித்து தமிழக மக்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாகவே ரூ.7,375 கோடி மதிப்பு தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது

Tamil Nadu Employment Latest News: 2025 பட்ஜெட்டுக்கு முன்னதாக, தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக மூன்று மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைக்கும் ஒப்புதல்.

1 /8

அடுத்தாண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், இன்னும் சில நாட்களில் தமிழ்நாடு பட்ஜெட் 2025 தாக்கல் செய்யப்பட உள்ளது. திமுக அரசின் கடைசி பட்ஜெட் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

2 /8

2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து 2021 முதல் 2024 வரை என நான்கு பட்ஜெட்களை திமுக அரசு தாக்கல் செய்துள்ளது. எனவே ஐந்தாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய திமுக தயாராகி வருகிறது.

3 /8

மேலும் அடுத்த வருடத்துடன் திமுக அரசின் ஐந்தாண்டு ஆட்சி முடிவடைய உள்ளதால், தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அடுத்தாண்டு 2026 இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய இயலும். எனவே தமிழ்நாடு பட்ஜெட் 2025 திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி மற்றும் விரிவான பட்ஜெட் என்பதால், மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.

4 /8

தமிழக சட்டசபை வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கூட உள்ளது. அப்போது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதற்கு முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

5 /8

இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களும் கலந்துக் கொண்டனர். இந்த அமைச்சரவை கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. 

6 /8

2025 தமிழ்நாடு பட்ஜெட் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

7 /8

இந்தநிலையில் அமைச்சரவை கூட்டத்தில், வேலூர், தூத்துக்குடி, திருச்சி, தொழிற்சாலைகள் அமைக்கும் முதலீட்டுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. அதாவது ரூ.7,375 கோடி மதிப்பு தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

8 /8

இதன் மூலம் சுமார் 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலகளாவிய திறன் மற்றும் லெதர் அல்லாத காலணி, உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.