PCOS பெண்கள் உடல் எடைக்குறைக்கனுமா..48 நாளில் இதை மட்டும் சாப்பிடுங்க ஆளே மாறிடுவீங்க!

PCOS உள்ள பெண்கள் 48 நாளில் குறிப்பிட்ட உணவுகளை மட்டும் சாப்பிட்டு உடல் எடையைக் குறைக்க முடியும். இந்த உணவுகள் ஹார்மோன் சமநிலையைச் சீர்செய்யவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன.

PCOS (Polycystic Ovary Syndrome) பெண்ணின் உடல் எடை மற்றும் ஹார்மோன் சமநிலைக்குப் பல சவால்களை உருவாக்குகிறது. இதன் காரணமாக, உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றன. இதைச் சமாளிக்க, சரியான உணவுப் பழக்கம் மிக முக்கியமாக உள்ளது.

1 /9

PCOS பெண்கள் அவதிப்படும் கஷ்டங்கள் பெரும்பாலும் தாங்கிக்கொள்ள முடியாதவையாக இருக்கும். அந்த வகையில் அவர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு பிரச்சனையும் மனதை மிகவும் பாதிக்கின்றது.

2 /9

PCOSயால் முடி உதிர்தல், எடை அதிகரிப்பு, மலட்டுத்தன்மை, மன நிலை பாதிப்பு, மனச்சோர்வு, வீக்கம், அஜீரணம் உள்ளிட்ட பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுகிறது.  

3 /9

வெந்தயம்: வெந்தயத்தில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. வெறும் வயிற்றில் வெந்தய நீரைக் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் உடல் எடையைக் குறைக்கும்.

4 /9

இஞ்சி: இஞ்சியை நன்றாகக் கொதிக்கவைத்து பின்னர் அதனைக் குடிக்கவும். இது வீக்கத்தைக் குறைத்து வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். மேலும், கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இஞ்சி நீர் எடை இழப்புக்குச் சிறந்தது.

5 /9

சோளம்: சோளம் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு கரையும், நச்சு கிருமிகள் நீங்கும் மற்றும் எடை இழக்க உதவுகிறது.

6 /9

பப்பாளி: சர்க்கரை உணவை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். மாறாக, இனிப்பு சுவை நிறைந்த இந்த பழத்தைச் சாப்பிடலாம். இது மாதவிடாயைச் சீராகக் கொண்டுவரும். எடையும் சமநிலையாக நிர்வகிக்க முடியும்.

7 /9

பாசிப்பயறு: பச்சைப்பயறு மற்றும் பாசிப்பயிறில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இது பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இவை ஆரோக்கியம் அளிப்பதோடு, எடையை நிர்வகிக்கவும் உதவுகின்றன.  

8 /9

இலவங்கப்பட்டை: இதில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. பசியைக் குறைத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

9 /9

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)