IND vs ENG: அகமதாபாத் மைதானம் யாருக்கு அதிக சாதகம்? இதோ புள்ளிவிவரம்!

IND vs ENG: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானம் பேட்டிங் அல்லது பந்துவீச்சு இரண்டில் எதில் அதிகம் கைக்கொடுக்கும் என்பதை இங்கு புள்ளிவிவரங்களுடன் காணலாம்.

டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றிருக்கும் நிலையில், ஒருநாள் தொடரில் தற்போது 2-0 என முன்னிலையில் உள்ளது. ஒருநாள் தொடரை வைட்வாஷ் செய்ய இந்திய அணிக்கு சிறப்பான வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குள் செல்வதற்கு முன் ஆறுதல் வெற்றியை பதிவு செய்ய விரும்பும்.

1 /8

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப். 12) மதியம் 1.30 மணிக்கு தொடங்கும். அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிதான், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் இந்திய அணி விளையாடும் கடைசி போட்டியாகும். 

2 /8

கடந்த 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்த மைதானத்தில் தோல்வி அடைந்த பின்னர், இந்திய அணி இங்கு விளையாடும் முதல் ஓடிஐ போட்டியாகும். கடைசியாக இங்கு கண்ணீர் விட்டு சென்றவர்கள், சாம்பியன்ஸ் டிராபிக்கு செல்லும் முன் இங்கிருந்து மனமகிழ்ச்சியுடன் செல்ல வேண்டும் என நினைத்திருப்பார்கள். 

3 /8

அப்படியிருக்க இந்திய 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினாலும், தொடரை வைட்வாஷ் செய்ய திட்டமிட்டிருக்கும். இங்கு இந்திய அணி விளையாடி உள்ள 20 போட்டிகளில் 11இல் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில், இந்த மைதானத்தில் ஆடுகளம், டாஸ் பேக்டர் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் இங்கு பார்க்கலாம். 

4 /8

ஒருநாள் போட்டியை பொறுத்தவரை இந்த மைதானம் பந்துவீச்சாளர்களுக்கே சாதகமாக இருந்து வந்திருக்கிறது. 31 ஒருநாள் போட்டிகளில் 6 முறை மட்டும்தான் இங்கு 300 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2010இல் தென்னாப்பிரிக்கா 365 ரன்களை அடித்தது. அதன்பின் 13 ஒருநாள் போட்டிகளில் ஒருமுறை கூட 300 ரன்கள் எடுக்கப்படவில்லை.  

5 /8

வேகப்பந்துவீச்சாளர்களே இங்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஒருநாள் அரங்கில் வேகப்பந்துவீச்சாளர்கல் 32.31 சராசரியில் 257 விக்கெட்டுகளையும், சுழற்பந்துவீச்சாளர்கள் 39.67 சராசரியில் 137 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளனர். இதன்மூலமே வேகப்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தை இங்கு நீங்கள் புரிந்துகொள்ளலாம்.   

6 /8

அதே நேரத்தில் இங்கு டாஸ் முக்கிய பங்கு வகிக்காது. இங்கு நடந்துள்ள 31 போட்டிகளில், 18 போட்டிகள் டாஸ் வென்ற அணிகளே வெற்றி பெற்றுள்ளன. ஆனால், கடைசி 10 போட்டிகளில் 6 போட்டிகளை டாஸ் தோற்ற அணிகளே வென்றுள்ளனர். இருப்பினும் சேஸிங்கில் பனிப்பொழிவுக்கு வாய்ப்பிருப்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்யும். மாலையில் பேட்டிங் செய்பவர்களுக்கு ஆடுகளம் சாதகமாக மாறலாம்.

7 /8

இந்திய அணி பிளேயிங் லெவன் கணிப்பு: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் / கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, வருண் சகர்வர்த்தி, அர்ஷ்தீப் சிங்

8 /8

இங்கிலாந்து அணி பிளேயிங் லெவன் கணிப்பு: பென் டக்கெட், பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வுட்