இளைஞர்களுக்கு குட் நியூஸ்..! மாத உதவித்தொகை - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்  உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்..

Tirupathur Unemployment Scholarship | திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..

1 /9

படித்து திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் நலனுக்காக மாதம் ஒன்றுக்கு (SSLC FAIL) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200 ம் (SSLC) பத்தாம் வகுப்பு: தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ல் (HSC) மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ.400ம் மற்றும் (DEGREE இசநிலை பட்டதாரிகளுக்கு ரூ.800- வீதம் மூன்றாண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர். உதவித் தொகை வழங்கப்படுகிறது. 

2 /9

மாற்றுத்திறனாளிகளை பொருத்தமட்டில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்துள்ள பதிவதரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600, ரூ.750, ரூ.1000 (SSLC, HSC, DEGREE) வீதம் பத்தாண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

3 /9

ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் ஏனையோரை பொறுத்தமட்டில்ல வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். தற்போது அரசாணைப்படி மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

4 /9

மனுதாரர் அரசு மற்றும் தற்காலிக அரசுபணி அல்லது தனியார் நிறுவனங்களின் வாயிலாக எந்தவிதமான நிதி உதவித்தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ மாணவியராக இருத்தல் கூடாது. இந்நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக் கல்வி கற்கும் மனுதாரர்களுக்கு பொருந்தாது. மேலும் வேறு எந்த துறையிலும் உதவித்தொகை பெற்று கொண்டிருத்தல் கூடாது.

5 /9

  இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற 01.10.2019 முதல் 31.12.2019 வரையான காலாண்டில் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகள் முடிவு பெற்றுள்ள பொதுப்பிரிவினர் மற்றும் 01.10.2023 முதல் 31.12.2023 வரையான காலாண்டில் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவு பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் நடப்பு காலாண்டிற்கு உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

6 /9

இதற்கு ஏதுவாக அச்சிட்ட விண்ணப்ப படிவங்களை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவகைவனாகத்தில் சி பினாக் தரைதனத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவகை நாட்களில் நேரில் வருகை புரிந்து பெற்றுக் கொள்ளலாம்.

7 /9

அல்லது. https.invelaivaippugovin (or) www.invelaivaipugov.in இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு நேரடியாகவும் விண்ணப்ப படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சி.பினாக் தரைதளத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் சமையத்தில் அலுவலக நாட்களில் நேரில் வந்து கேட்டு தெரிந்து கொள்ளலாம். 

8 /9

விண்ணப்ப படிவத்தில் தெரிவித்தவாறு பக்க எண்?உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் வருமான சான்றில் வருவாய் ஆய்வாளர் அவர்களின் கையொப்பம் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்துடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தங்களுக்குக்கென தனியாக (own account) வங்கி கணக்கு உள்ள புத்தகம் ஆதார் அட்டை, குடும்ப அட்டை கல்விச்சான்றிழ்கள், சாதி சான்றிதழ் வேலைவாய்ப்பு அடையான அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை இணைக்க வேண்டும்.

9 /9

இந்த விண்ணப்பத்தை பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பத்தினை சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்டஆட்சித்தலைவர் சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளார்.