Bank Holiday Latest News: நாளை (பிப்ரவரி 19, 2025) வங்கிக்குச் நீங்கள் செல்ல நினைத்தால், இந்த செய்தி உங்களுக்கு முக்கியமானது. பிப்ரவரி 19 ஆம் தேதி வங்கிகள் செயல்படுமா? அல்லது விடுமுறையா? அறிந்துக்கொள்ளுங்கள்.
மகாராஷ்டிராவில் வங்கிகள் செயல்படாது
புகழ்பெற்ற மராட்டிய வீரரும் மராட்டியப் பேரரசின் ராஜாவான சிவாஜி மகாராஜின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 19 அன்று சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனால் மகாராஷ்டிராவில் விடுமுறை நாளாக குறிக்கப்படுகிறது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தியை முன்னிட்டு, பிப்ரவரி 19, 2025 அன்று மகாராஷ்டிராவின் சில நகரங்களில் வங்கிகள் செயல்படாது. ஆனால் இந்தியா முழுவதும் உள்ள பிற நகரங்களில் உள்ள பெரும்பாலான வங்கிகள் திறந்திருக்கும்.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி வங்கிகள் செயல்படுமா?
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறை பட்டியலின்படி, பிப்ரவரி 19 அன்று இந்த நகரங்களில் வங்கிகள் செயல்படாது.
- பேலாப்பூர்
- மும்பை
- நாக்பூர்
பிப்ரவரி 2025 இல் வங்கி விடுமுறை நாட்கள்
வங்கி விடுமுறை குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி, பிப்ரவரி 2025 மாதம் வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- பிப்ரவரி 2, 2025: ஞாயிறு
- பிப்ரவரி 3, 2025: சரஸ்வதி பூஜை (அகர்தலா)
- பிப்ரவரி 8, 2025: இரண்டாவது சனிக்கிழமை
- பிப்ரவரி 9, 2025: ஞாயிறு
- பிப்ரவரி 11, 2025: தை பூசம் (சென்னை)
- பிப்ரவரி 12, 2025: குரு ரவிதாஸ் ஜெயந்தி (சிம்லா, ஐஸ்வால், டெல்லி, உத்தரகண்ட்)
- பிப்ரவரி 15, 2025: லுய்-நை-நீ (இம்பால்)
- பிப்ரவரி 16, 2025: ஞாயிறு
- பிப்ரவரி 19, 2025: சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (பேலாப்பூர், மும்பை, நாக்பூர்)
- பிப்ரவரி 20, 2025: மாநில நாள் (ஐஸ்வால், இட்டாநகர்)
- பிப்ரவரி 22, 2025: நான்காவது சனிக்கிழமை
- பிப்ரவரி 23, 2025: ஞாயிறு
- பிப்ரவரி 26, 2025: மகாசிவராத்திரி (இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில்)
- பிப்ரவரி 28, 2025: லோசர் (காங்டாக்)
வங்கி விடுமுறை அட்டவணைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளவும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த குறிப்பிட்ட சில விடுமுறை நாட்கள் உள்ளன. எனவே வங்கி விடுமுறை பட்டியல் குறித்து துல்லியமாக தெரிந்துக்கொள்ள ஆர்பிஐ (RBI) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
ஆன்லைன் வங்கி சேவையை பயன்படுத்தலாம்
சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி காரணமாக் வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், நீங்கள் வங்கி சேவைகளை தொடர்ந்து பெற ஆன்லைன் வங்கி சேவையை அணுகலாம்.
மேலும் படிக்க - UPI மூலம் ரூ. 30,000 உடனடி கடன் வழங்கும் மத்திய அரசு! எப்படி பெறுவது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ