JanNivesh SIP: எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் வழங்கும் ஜன்நிவேஷ் எஸ்ஐபி (முறையான முதலீட்டுத் திட்டம்) முதலீட்டு திட்டத்தில் மாதத்திற்கு ₹250 என்ற சிறிய தொகையில் கூட முதலீடு செய்ய தொடங்கலாம். சிறு முதலீட்டாளர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
'ஜன் நிவேஷ் SIP' திட்டம் குறித்து தெரிவித்த, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தலைவர் (State Bank of India - SBI) செட்டி , இந்த திட்டம் ₹250 முதல் தொடங்கும் மைக்ரோ-சிஸ்டமேடிக் முதலீட்டு சேவையை இலவசமாக வழங்கும் என்றும், இதனால் சாமான்யர்கள் அனைவரும் கட்டணம் இல்லாமல், வெளிப்படையான நிதி சேவைகளை பெற முடியும் என்றும் அவர் உறுதியளித்தார்.
ஜன் நிவேஷ் எஸ்ஐபியின் சிறப்பு அம்சங்கள்
1. வெறும் ₹250 இல் முதலீடு செய்யத் தொடங்கலாம். இதன் மூலம், சிறு முதலீட்டாளர்கள் கூட மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய முடியும்.
2. முதலீட்டாளர்கள் எளிதாக YONO, Paytm, Zerodha, Groww போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலம் முதலீடு செய்யலாம்.
3. கிராமங்கள், சிறிய நகரங்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜன் நிவேஷ் எஸ்ஐபி எனது மிகப்பெரிய கனவு: செபி தலைவர்
எஸ் பி ஐ பரஸ்பர நிதியத்தின் புதிய திட்டத்தை SEBI இன் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா தலைவர் மாதபி பூரி புச் அறிமுகப்படுத்தினார், தன்னுடைய மிகப்பெரிய கனவு இது என விவரித்த மாதாபி பூரி புச், ₹250 என்ற அளவில் முதலீடு செய்யத் தொடங்கும் வசதியை சாமான்யர்களுக்கு வழங்க வேண்டும் என்பது தனது மிகப்பெரிய கனவு என்று அறிமுக விழாவில் கூறினார்.
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டின் நிர்வாக இயக்குநர் நந்த் கிஷோர் கூறுகையில், சிறு முதலீட்டாளர்களையும், அமைப்புசாரா துறையைச் சேர்ந்தவர்களையும் முதலீடு செய்ய ஊக்குவிக்க விரும்புகிறோம். எனவே, ஜன் நிவேஷ் எஸ்ஐபி செலவுகள் இல்லாமல் சாமான்ய மக்களும் எளிமையாக முதலீடு செய்யும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அதிகரிக்கும் மாத ஓய்வூதியம்: அரசின் பரிசு, PF உறுப்பினர்களுக்கு விரைவில் நல்ல செய்தி
ஜன் நிவேஷ் எஸ்ஐபி கீழ்கண்ட பிரிவில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது:
முதல் முறை முதலீட்டாளர்கள்: கிராமப்புற, தொலைதூற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் இருந்து முதல் முறை முதலீட்டாளர்களை ஈர்ப்பதை ஜான்நிவேஷ் SIP நோக்கமாகக் கொண்டுள்ளது, இது அவர்களுக்கு பரஸ்பர நிதி உலகில் அணுகக்கூடிய நுழைவுப் புள்ளியை வழங்குகிறது.
நகர்ப்புற முதலீட்டாளர்கள்: நிதி ஆலோசகர்கள் வசதியை பெற இயலாதவக்ள் அதே சமயத்தில் நிதித் தேவைகளுக்கு டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்த வசதியாக இருக்கும் நகர்ப்புற முதலீட்டாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது.
அமைப்புசாரா துறை தொழிலாளர்கள்: சுயதொழில் செய்பவர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் உள்ள சிறு சேமிப்பாளர்கள் ஜான்நிவேஷ் SIP இன் எளிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையிலிருந்து பெரிதும் பயனடையலாம். இந்த முயற்சி அவர்கள் தங்கள் நிதி இலக்குகளை அடைய முதலீடு செய்து செல்வத்தை உருவாக்குவதை எளிதாக்குகிறது.
முதலீட்டிற்கான டிஜிட்டல் வசதியை பயன்படுத்தும் முதலீட்டாளர்கள்: நேரடியான மற்றும் தகவமைப்புத் திறன் கொண்ட முதலீட்டு விருப்பங்களைத் தேடும் தொழில்நுட்ப ஆர்வமுள்ள நபர்கள், ஜான்நிவேஷ் SIP அவர்களின் செல்வத்தை உருவாக்கும் இலக்குகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருப்பதைக் காண்பார்கள்.
அனைவரும் SIP மூலம் சேமிக்கவும் முதலீடு செய்ய முடியும்
சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் பெரிய அளவிலான நிதியை சேர்க்க விரும்புபவர்களை மனதில் வைத்து இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் Paytm, Zerodha மற்றும் Groww போன்ற டிஜிட்டல் தளங்களிலும் கிடைக்கும்.
மேலும் படிக்க | UPI மூலம் ரூ. 30,000 உடனடி கடன் வழங்கும் மத்திய அரசு! எப்படி பெறுவது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ