நெப்போலியன் வீட்டில் விசேஷம்! கேக் வெட்டி கொண்டாடிய புது மருமகள்..

Napoleon Son Dhanoosh Wife Akshaya Celebrated Valentines Day : பிரபல நடிகர் நெப்போலியன் சமீபத்தில் தனது மகன் தனுஷிற்கு திருமணம் செய்து வைத்தார். இத எடுத்து இவர்கள் கேக் வெட்டி கொண்டாடிய தருணங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Feb 16, 2025, 08:25 PM IST
  • கேக் வெட்டி கொண்டாடிய நெப்போலியன் மருமகள்!!
  • மகிழ்ச்சியில் குடும்பத்தினர்..
  • என்ன விஷேஷம் தெரியுமா?
நெப்போலியன் வீட்டில் விசேஷம்! கேக் வெட்டி கொண்டாடிய புது மருமகள்.. title=

Napoleon Son Dhanoosh Wife Akshaya Celebrated Valentines Day : சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பிரபல நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் ஊரையே திரும்பி பார்க்க வைத்தது. தடபுடலாக நடந்த இந்த திருமணத்தில் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடிய தருணங்கள் தற்போது இணையத்தில் வரலாகி வருகிறது. 

தடபுடலாக நடந்த தனுஷின் திருமணம்: 

நெப்போலியனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் ஒருவரது பெயர் தனுஷ். இவருக்கு ஒரு அரியவகை நோய் பாதிப்பு காரணமாக, கை கால்கள் செயல் இழந்துவிட்டது. தனது மகனுக்கு சிகிச்சை பார்ப்பதற்காக அவர் அவரை அமெரிக்காவிற்கு அழைத்து சென்றார். அங்கு மகனுக்கு ட்ரீட்மென்ட் செட் ஆகி விட தான் அவரது பிசினஸும் அங்கு தலை தூக்கியது. இதனால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். 

சில மாதங்களுக்கு முன்பு தனுஷுக்கும், தமிழ்நாட்டை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. ஜப்பானில் தடபுடலாக நடந்த இந்த திருமணத்தில், தமிழ் நட்சத்திரங்களான மீனா, ராதிகா, சரத்குமார், சுகாசினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனால் திருமணமே திருவிழா போல களைகட்டியது. இந்த திருமணம் பல்வேறு விமர்சனங்களையும் கிளப்பியது. ஆனால் அதையெல்லாம் பாசிட்டிவாக எடுத்துக் கொண்ட நெப்போலியன் குடும்பம், தங்களது மகன் மற்றும் மருமகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். 

வீட்டில் கேக் வெட்டி கொண்டாட்டம்:

திருமணம் முடிந்து சில மாதங்கள் கடந்து இருக்கும் நிலையில் தனுஷ் தனது மனைவியுடன் வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்று விட்டு வந்த வீடியோ எல்லாம் வைரல் ஆனது. இதை எடுத்து சமீபத்தில் காதலர் தினமும் முடிந்தது. இந்த நாளில் நெப்போலியனும் அவரது மனைவியும் கேக் வெட்டி தங்களின் அன்பை பரிமாறிக் கொண்ட போட்டோக்களும், தனுஷும் அவரது மனைவி அக்ஷயாவும் கேக் வெட்டி ஊட்டிக்கொண்ட போட்டோக்களும் பதிவிடப்பட்டன. இதை பார்த்த நெட்டிசன்கள் புதுமண தம்பதிகளுக்கு காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தனுஷை தாக்கிய நோய் என்ன?

நெப்போலியன் மகன் தனுஷுக்கு மிகச்சிறு வயதிலேயே muscular dystrophy எனப்படும் அரிய வகை நோய் தாக்கியது. இதனால் அவரால் 10 வயதுக்கு மேல் எழுந்து நடக்க முடியவில்லை. இதற்கு வெளிநாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி என்ன ட்ரீட்மெண்ட் எடுத்தும் சரியான பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து தனது 25 வயதை கடந்த தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் ஆசை பட்டனர். இதற்கு பெண் பார்க்கும் படலத்திலும் இறங்கினர். அப்போது, இந்தியாவில் தங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த அக்‌ஷயாவை பற்றி தெரிந்து கொண்டு, அவரை தனுஷின் பாட்டி வழியாக சென்று பெண் கேட்டிருக்கின்றனர். அதற்கு அவர்களது குடும்பத்தினர் ஓகே சொல்ல, நெப்போலியனின் தாயார் நேராக வந்து அந்த பெண்ணிடம் பேசியிருக்கிறார். 

“யாரேனும் உன்னை வலுக்காட்டாயப்படுத்தி இதற்கு சம்மதம் தெரிவிக்க வைக்கின்றனரா?” என்று அப்பெண் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சிறு வயதில் நான் தனுஷை பார்த்திருக்கிறேன். நானாக விருப்பப்பட்டுதான் இந்த திருமணத்திற்கு ஒப்புக்காெள்கிறேன்” என கூறியிருக்கிறார். இதன் பிறகுதான் அனைத்து திருமண ஏற்பாடுகளும் நடந்தது. இப்போது தனுஷும் அக்ஷயாவும் தங்களது மகிழ்ச்சியான நேரத்தை ஒரே குடும்பமாக செலவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | நடிகர் நெப்போலியன் மகனுக்கு மீண்டும் திருமணம்!! அதுவும் 6 மாசத்துலையே..

மேலும் படிக்க | நெப்போலியன் மகனுக்கு அவரது மனைவி அக்‌ஷயா கொடுத்த ஸ்பெஷல் பரிசு! என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News