மாரடைப்பு ஏற்படாமல் இருக்க... LDL கொலஸ்ட்ராலை எகிற வைக்கும் இந்த உணவுகளுக்கு நோ சொல்லுங்க

இந்தியாவில், மாரடைப்பினால் இறப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை, அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பலியாவது கவலை அளிக்கும் விஷயம். தங்கள் இதய ஆரோக்கியத்தில் அனைவருமே சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 16, 2025, 12:02 PM IST
  • இதய தமனி நோய் மற்றும் பிற இதய நோய்கள் எதிர்காலத்தில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை.
  • உப்பை அளவோடு சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
  • ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது.
மாரடைப்பு ஏற்படாமல் இருக்க... LDL கொலஸ்ட்ராலை எகிற வைக்கும் இந்த உணவுகளுக்கு நோ சொல்லுங்க title=

இந்தியாவில், மாரடைப்பினால் இறப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை, அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பலியாவது கவலை அளிக்கும் விஷயம். தங்கள் இதய ஆரோக்கியத்தில் அனைவருமே சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது.

மாரடைப்பு, இதய தமனி நோய் மற்றும் பிற இதய நோய்கள் எதிர்காலத்தில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. இதற்கு, இன்றே விழிப்புடன் இருப்பது நல்லது, சில பழக்கங்களை மாற்றுவது நல்லது. பிரபல உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ், உங்கள் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால் சில விஷயங்களில் இருந்து விலகி இருங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதய ஆரோக்கியத்திற்கு கீழ்கண்ட உணவுகள் மற்றும் பழக்கங்களில் இருந்து விலகி இருங்கள்

 உப்பு

உப்பை அளவோடு சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. குறிப்பிட்ட அஆளவு உப்பு உடலுக்கு அவசியம் தேவை. ஆனால், தேவைக்கு அதிகமாக உப்பை உட்கொள்ள ஆரம்பிக்கும் போது பிரச்சனை எழுகிறது. இதன் காரணமாக, இரத்தத்தில் இரும்புச்சத்து குறைபாடு மற்றும் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கத் தொடங்குகிறது. பிற்காலத்தில் அது உடல் பருமனாக மாறி, இதய நோய்கள், மாரடைப்பு, ஆகியவை ஏற்படத் காரணமாகிறது.

சர்க்கரை

இனிப்பு சுவையை தவிர்ப்பது கடினம் தான். ஆனால் அது நம் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய எதிரி. அதிக சர்க்கரை உட்கொள்வது உடல் பருமனை உண்டாக்கும், இது எதிர்காலத்தில் இதய நோய்க்கு வழிவகுக்கும். எனவே, சர்க்கரையை குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். இதற்கு பதிலாக வெல்லம், கருப்பட்டி ஆகியவற்றை உட்கொள்வது நல்லது. ஆனால், அதனையும் அளவோடு உட்கொள்ள வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

உங்கள் புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இறைச்சியை உட்கொள்வது அவசியம். அவை உங்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை, ஆனால் இப்போதெல்லாம் பதப்படுத்தப்பட்ட உணவை உண்ணும் போக்கு அதிகரித்துள்ளது. இதில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியும் அடங்கும். இதில் ப்ரிசர்வேட்டிவ் அளவு அதிகமாக இருப்பதால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மேலும் படிக்க | குடல் நச்சுக்கள் அழுக்குகளை நீக்கும் விளக்கெண்ணெய்... பயன்படுத்தும் சரியான முறை இது தான்

அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள்

அதிக கொழுப்பு உள்ள பால் பொருட்களில், LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது. அதிக கொழுப்பு உள்ள பால், சீஸ் என்னும் பாலாடை கட்டி, மாரடைப்பௌ ஏற்படுத்து கெட்ட கொழுப்பை எகிற வைத்து இதய நோய் ஆபத்தை அதிகரிக்கும்.

சுட்ட எண்ணெய்

எண்ணெயில் பொரித்த உணவுகள், எல்லாமே. ஆரோக்கியத்திற்கு கேடு தான். அதிலும் குறிப்பாக மீண்டும் மீண்டும் சூடாக்கப்பட்ட, சுட்ட எண்ணெய் மிகவும் ஆபத்து. இதில் பொரித்த உணவுகள், LDL கொலஸ்ட்ரால் அளவை பெருமளவு அதிகரிக்கும் ஆற்றல் கொண்டவை. இதனால், மாரடைப்பு அபாயம் பல மடங்கு அதிகரிக்கும்.

துரித உணவுகள்

துரித உணவுகள், ரெடி டு ஈட் வகை உணவுகளில் அதிக அளவிலான சோடியம் மற்றும் ப்ரிசர்வேடிகள் உள்ளன. நீண்ட கால கெட்டுப் போகாமல் இருக்க சேர்க்கப்படும் இரசாயனங்கள், இதய ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு. அதோடு இவை நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகிய ஆபத்துக்களை அதிகரிக்கிறது. 

மன அழுத்தம்

உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தம், மனச்சோர்வு அல்லது பதற்றம் இருந்தால், அது இதயத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ்வது நல்லது. இதற்கு யோகா, தியானம் ஆகியவற்றை கடைபிடிப்பது பலன் தரும்

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | LDL கொலஸ்ட்ராலை எரித்து... மாரடைப்பை தடுக்கும் சில சட்னி வகைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News