Tamil Nadu Power Cut Area List: மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் பிப்ரவரி 17 (திங்கட்கிழமை) ஆம் தேதி தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதாவது பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு மின்பழுதுகளை சரி செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை பகுதிகள் பட்டியல்
நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் நாளை (பிப்ரவரி 17) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியலை பார்ப்போம்.
நீலகிரி மாவட்டம் மின்தடை விவரம்
கூடலூர், உப்பட்டி, சேரம்பாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
பல்லடம் மின்தடை விவரம்
கேபி கிராமம், அரச்சலூர், சிவன்மலை, மருதுரை, குட்டப்பாளையம், நத்தகாடையூர், ஜெகதுகுரு, செட்டிபாளையம், பச்சபாளையம், காங்கேயம் சாலை, சுக்கிடிபாளையம், வெள்ளமடை, மேட்டுப்பாறை, மேட்டுப்பாளையம், இலியாம்புதூர், காங்கேயம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
திருப்பூர் மின்தடை விவரம்
கடையூர், மேட்டுப்பாறை, மேட்டுப்பாளையம், இல்லியம்புதூர், காங்கேயம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட மின்தடை விவரம்
உடுமலைப்பேட்டை, ஐயர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்ஃபால்ஸ், கொரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லார், பெரிய கல்லாறு, உயர்காடு, சோலையார்நகர், முடிஸ், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
மேலும் படிக்க - மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்னவாகும்? இழப்பு மக்களுக்கு தான்..!
மேலும் படிக்க - கோடைகாலத்தில் மின் கட்டணத்தை குறைக்க சூப்பர் டிப்ஸ்! ஏசி ஓடினாலும் கவலை வேண்டாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ