Tamil Nadu Electricity Board Latest News: மின் இணைப்பு வைத்துள்ள அனைவருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது இந்த விசியத்தை அனைவருமே கட்டாயமாக செய்ய வேண்டும் எனவும் மக்களை எச்சரித்துள்ளனர். எனவே தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்த அறிவிப்பு என்ன? அதன்மூலம் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்பதைக் குறித்து பார்ப்போம்.
தமிழ்நாடு மின்சார வாரியம் கோரிக்கை
தற்போது தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் மின்கசிவு மூலம் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் (Tamil Nadu Electricity Board) சார்பில் மின் இணைப்பு வைத்துள்ள அனைவருக்கும் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளது.
அதாவது ஆர்சிடி (RCD) என்கிற உயிரை காக்கும் சின்ன கருவியை வீட்டில் அனைவரும் கட்டாயம் பொறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. ஆர்சிடி என்ற கருவியை வீட்டில் பொருத்தினால் சிறிய மின்கசிவு இருந்தால் கூட உயிரிழப்பு ஏற்படும் அபாயத்தை தடுத்து விடும் எனவும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முக்கிய அறிவிப்பு
இதன் காரணமாக அனைத்து மக்களையும் வீட்டில் 30 மில்லி ஆம்பியர் ஆர்சிடி பொருத்துங்கள் என தமிழக மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. மின்கசிவு காரணமாக ஏற்படும் உயிர்பலிகளை தடுக்க மின் இணைப்புகளில் ஆர்.சி.டி. (RCD) என்ற கருவியை பொறுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆர்சிடி கருவி என்றால் என்ன?
ஆர்.சி.டி. (RCD) என்பது ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (Residual Current Device) ஆகும். இது மின் கசிவில் இருந்து உயிர் காக்கும் கருவியாக செயல்படுகிறது. உங்கள் வீட்டில் இருக்கும் மின் இணைப்புகளில் ஏதாவது மின்கசிவு அல்லது பழுதுகள் ஏற்பட்டிருந்தால், உங்களுக்கு தெரியாமல் நீங்கள் அதை தொடும் போது அல்லது பட்டனை ஆன் செய்யும் போது, உடனே இந்த ஆர்சிடி மூலமாக வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். உயிருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், மின்கசிவில் இருந்து உங்களை பாதுகாப்பது தான் ஆர்.சி.டி. வேலையாகும்.
ஆர்சிடி vs பியூஸ் எது சிறந்தது?
எங்கள் வீட்டில் தான் "பியூஸ்" இருக்கிறது. அதுவே போதுமானது. எதற்கு "ஆர்.சி.டி" கருவி பொறுத்த வேண்டும் என பலர் நினைக்கலாம், அதாவது இந்த ஆர்சிடி கருவி விரைவாக செயல்பட்டு உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமால் மின்சாரத்தை உடனடியாக துண்டித்து விடும். உங்க வீட்டில் குழந்தைகள் இருந்தால், இந்த ஆர்சிடி ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும். எனவே மக்கள் அனைவரும் ஆர்சிடி கருவியை கட்டாயமாக பொருத்திக்கொள்ளுங்கள்.
எத்தனை வகை ஆர்சிடி கருவிகள் உள்ளன?
ஆர்சிடி கருவியில் இரண்டு வகை உள்ளது. ஒன்று சாக்கெட் அவுட்லெட் ஆர்சிடி, மற்றொன்று போர்ட்டபிள் ஆர்சிடி. இதில் எது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்கள் மின்இணைப்பை பொறுத்தது. அப்படின்னு சொல்லிட்டு அந்த கடையில கேட்டு தெரிஞ்சு வாங்கி யூஸ் பண்ணுங்க சோ
மேலும் படிக்க - கோடைகாலத்தில் மின் கட்டணத்தை குறைக்க சூப்பர் டிப்ஸ்! ஏசி ஓடினாலும் கவலை வேண்டாம்
மேலும் படிக்க - மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்னவாகும்? இழப்பு மக்களுக்கு தான்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ