இனி இலவசம் இல்லை! ஐபிஎல் பார்க்க கூடுதல் கட்டணம்! எவ்வளவு தெரியுமா?

ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இரண்டு ஓடிடிகளும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்த புதிய தளத்திற்கு JioHotstar என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Written by - RK Spark | Last Updated : Feb 15, 2025, 01:03 PM IST
  • இந்தியாவில் தொடங்கப்பட்ட JioHotstar.
  • பல புதிய நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
  • புதிய திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இனி இலவசம் இல்லை! ஐபிஎல் பார்க்க கூடுதல் கட்டணம்! எவ்வளவு தெரியுமா? title=

இந்தியாவின் முன்னணி ஓடிடி நிறுவனங்களான ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இணைவது பற்றி பல நாட்களாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இரண்டு ஓடிடிகளும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்த புதிய தளத்திற்கு JioHotstar என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஓடிடி கிட்டத்தட்ட 10 மொழிகளில் படங்கள் மற்றும் வெப் தொடர்களை வழங்க உள்ளது. இது தவிர கிரிக்கெட் தொடர்கள், கபடி, கால்பந்து போன்ற நிகழ்ச்சிகளும் நேரலையில் இடம் பெரும். மேலும் சர்வதேச தொடர்களான NBCUniversal Peacock, Warner Bros, Discovery, HBO மற்றும் Paramount போன்றவற்றின் நிகழ்ச்சிகளும் JioHotstar-ல் இடம் பெரும். இது தற்போது வேறு எந்த ஸ்ட்ரீமிங் சேவையும் வழங்கவில்லை.

மேலும் படிக்க | Flipkart Big Saving Days Sale: 5 பிராண்டட் ஸ்மார்ட்போன்களில் அட்டகாசமான சலுகைகள்

JioHotstarக்கு சந்தா எவ்வளவு?

JioHotstar ஓடிடியை தற்போது எந்தவித கட்டணமும் இல்லாமல் பார்க்க முடியும். அதாவது பயனர்கள் சந்தா இல்லாமல் அனைத்தையும் கண்டு ரசிக்கலாம். ஆனால் திரைப்படங்கள் அல்லது வெப் தொடர்கள் இடையில் விளம்பரங்கள் வரும். உங்களுக்கு இடையில் விளம்பரங்கள் வர வேண்டாம் என்றாலும், உயர் தரத்தில் வீடியோக்களை பார்க்க வேண்டும் என்றாலும் மூன்று மாதங்களுக்கு ரூ.149 கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது JioHotstar இந்தியாவில் சூப்பர் மற்றும் பிரீமியம் ஆகிய இரண்டு வகையான சந்தாக்களை வழங்குகிறது. சூப்பர் சந்தா திட்டத்தில் அனைத்து பிரீமியம் உள்ளடக்கத்தையும் விளம்பரங்களுடன் கண்டு மகிழலாம். பிரீமியம் திட்டங்களில் விளம்பரங்கள் இல்லாத சேவையை பயனர்கள் பெறலாம்.

மொபைலில் JioHotstar பயன்படுத்தினால் ரூ.149க்கு 3 மாதங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதே சமயம் ரூ.499 செலுத்தி ஒரு வருடங்களுக்கு சந்தா எடுத்து கொள்ள முடியும். ஆனால் ஒரு நேரத்தில் ஒரு மொபைலில் மட்டுமே பார்க்க முடியும். இது தவிர சூப்பர் திட்டத்தில் 3 மாதங்களுக்கு ரூ.299 அல்லது ஆண்டுக்கு ரூ.899 செலுத்தி விளம்பரங்களுடன் கண்டு மகிழலாம். சூப்பர் திட்டத்தில் நீங்கள் ஒரே நேரத்தில் 2 சாதனங்களில் லாகின் செய்து கொள்ளலாம். விளம்பரங்கள் இல்லாமல் பிரீமியம் திட்டத்தில் மாதத்திற்கு ரூ.299, 3 மாதங்களுக்கு ரூ.499 மற்றும் ஆண்டுக்கு ரூ.1499 செலுத்தி கண்டு மகிழலாம். பிரீமியம் திட்டத்தில் ஒரே நேரத்தில் 4 சாதனங்களை பயன்படுத்தி கொள்ள முடியும்.

JioHotstarல் இவற்றையும் பார்க்கலாம்

JioHotstarல் HBO போன்ற வெளிநாட்டு தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை கண்டு மகிழலாம். மேலும் விளையாட்டுப் போட்டிகளை நேரலையில் காண முடியும். ஜியோ சினிமாவைப் போலவே கிரிக்கெட், டென்னிஸ், பிரீமியர் லீக் மற்றும் பிற விளையாட்டுப் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை பார்க்க முடியும். ஜியோஸ்டார் ஸ்போர்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சோக் குப்தா கூறுகையில், "இந்தியாவில் விளையாட்டு என்பது முக்கியமான ஒன்று. பல மில்லியன் கணக்கான மக்களை ஒன்றிணைக்கிறது. இந்திய கிரிக்கெட்டின் பிரீமியர் லீக், உள்நாட்டு தொடர்கள் மற்றும் சர்வதேச போட்டிகளை இந்த தளம் வழங்க உள்ளது" என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க | Deepseek: டீப்சீக் செயலிக்கு தடை விதித்த அரசு... விலகி இருக்க மக்களுக்கு அறிவுரை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News