Weight Loss Journey: உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிச்சயம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், அதை எப்படி செயல்படுத்துவது என்பதுதான் பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. அப்படியிருக்க, உடல் எடை குறைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றால் ஊட்டச்சத்து நிபுணரையோ அல்லது மருத்துவ நிபுணரையோ சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
Weight Loss Journey: 86 கிலோவை குறைத்த பிரஞ்சல் பாண்டே
அந்த வகையில், தற்போது நிபுணர்கள் இன்ஸ்டாகிராம் வழியாகவும் மக்களை எளிதாக சென்றடைகின்றனர். இதன்மூலம், தேவையற்ற அச்சம், வதந்திகள் பரவுவது தடுக்கப்படுகிறது. இருப்பினும், உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற உடல் எடை குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
தேர்ச்சி பெற்ற ஊட்டச்சத்து நிபுணரும், உடல்நல ஆலோசகருமான பிரஞ்சல் பாண்டே என்பவர் 86 கிலோ அளவிற்கு உடல் எடையை குறைத்த அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் உடல் எடை குறைப்பு குறித்த அனுபவ பகிர்வுகளும், டிப்ஸ்களும் நிரம்பி வருகின்றனர்.
Weight Loss Journey: பிரஞ்சல் பாண்டே சொல்லும் 5 டிப்ஸ்கள்
உடல் எடை குறைப்பு அனுபவத்தில் இருந்து அவர் கற்றுக்கொண்ட உடற்தகுதியை பெறுவதற்கான 5 உண்மைகள் குறித்து ஒரு வீடியோவில் பகிர்ந்திருந்தார். அவற்றை இங்கு விரிவாக காணலாம்.
- கலோரியே முதன்மையானது: தொடர்ந்து கட்டுப்பாட்டுடன் இருந்தும் உடல் எடை உங்களுக்கு குறையவில்லை என்றால் நீங்கள் கலோரிகளை குறைவாக உட்கொள்ளவில்லை என அர்த்தம். குறைவான கலோரிகளை எடுத்துக்கொள்வதே உடல் எடை குறைப்புக்கு உதவும்.
- ஓய்வு முக்கியம் அமைச்சரே: தினமும் 7-8 மணிநேரம் தூக்கம் அவசியம். நீங்கள் தசைகளை ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வலிமையாக்கும் போது, உங்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுடன் நல்ல தூக்கமும் வேண்டும். நீங்கள் தூங்காமல் இருந்தால் உடற்சோர்வு ஏற்பபட்டு உடல்நலக்குறைவு ஏற்படும்.
- ஊட்டச்சத்தில் கவனம் செலுத்துங்கள்: புரோட்டீன் சப்ளிமண்ட்ஸ் மற்றும் அசைவ உணவுகளில் கிடைக்கும் புரோட்டீனும் ஒன்றில்லை. பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளில் கிடைக்கும் ஊட்டச்சத்தை விட இதுபோன்ற உணவுகளில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் நீண்ட கால நோக்கில் உங்களது உடலை தொந்தரவு செய்யாது.
- தொடர்ச்சியாக செய்யுங்கள்: ஊக்கம் குறையலாம் ஆனால் ஒழுக்கம்தான் உங்களை ஒரு விஷயத்தை தொடர்ச்சியாக செய்ய வைக்கும். உடற்தகுதி பெறுவது என்பது ஒரு நீண்ட கால செயல்பாடு. நீங்கள் தினமும் அதற்காக உழைத்தால், தினமும் பலன் கிடைக்கும்.
- பொறுமையாக இருங்கள்: உங்களால் சில நாள்கள் செய்ய வேண்டும், சில நாள்கள் செய்ய முடியாது, நீங்கள் எதிர்பார்க்கும் பலன் உடனடியாக கிடைக்காது, இந்த சூழல்களில் நம்பிக்கையுடன் இருந்து நீண்ட காலம் செயல்படுங்கள். அது ஒன்றே உங்களுக்கு நன்மையை அளிக்கும்.
Weight Loss Journey: 150 கிலோ டூ 64 கிலோ
இந்த 5 விஷயங்கள்தான் பிரஞ்சல் பாண்டேவின் உடல் எடை குறைப்பு அனுபவத்தில் அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆகும். 2022ஆம் ஆண்டில் 150 கிலோ உடல் எடையுடன் இருந்த பிரஞ்சல் பாண்டே இவற்றை பின்பற்றியே 2024ஆம் ஆண்டில் 86 கிலோ குறைத்து, 64-68 கிலோவில் உள்ளார். எனவே, நீங்களும் இவற்றில் கவனம் செலுத்துவது முக்கியமாகும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் உங்களின் விழிப்புணர்வுக்காக எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். பிரஞ்சல் பாண்டேவின் இந்த கருத்துகளை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)
மேலும் படிக்க | ஒரே வாரத்தில் 12 கிலோ... படுவேகமாக எடையை குறைத்த பெண் - எப்படி தெரியுமா?
மேலும் படிக்க | 6 மாசத்தில் 30 கிலோவை குறைத்த பெண்... கொழுப்பை குறைக்க உதவியது எது தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ