வாகனங்களை ஏலம் விடும் தமிழ்நாடு அரசு - எங்கு நடக்கிறது தெரியுமா? முழு விவரம்

Tamil Nadu Government | ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை தமிழ்நாடு அரசு ஏலம் விடுகிறது. இது குறித்த முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 13, 2025, 07:04 AM IST
  • ரேஷன் அரிசி கடத்தல் வாகனங்கள் ஏலம்
  • திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
  • வரும் 18 ஆம் தேதி ஏலம் நடைபெறும் என அறிவிப்பு
வாகனங்களை ஏலம் விடும் தமிழ்நாடு அரசு - எங்கு நடக்கிறது தெரியுமா? முழு விவரம் title=

Tamil Nadu Government Latest News | தமிழ்நாடு முழுவதும் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இலவச ரேஷன் அரிசி கொடுக்கப்படுகிறது. ஆனால் இதனை சிலர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர். அதேபோல் மக்களிடம் கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி வாங்கும் கும்பல் அதனை அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில அளவில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஒன்றை உருவாக்கி கண்காணித்து வருகிறது. மாநில எல்லைப் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தீவிர கண்காணிப்புகள் செய்யப்படுகின்றன.

அந்தவகையில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனையொட்டி அப்பகுதி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பில் ஈடுப்பட்ட காவல்துறை, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறது. இப்போது அந்த வாகனங்களை ஏலம் விடுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிவிப்பில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறையினரால் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பணியின்போது கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படும் என அறிவித்துள்ளார். 

அந்த அறிவிப்பில், "திருவள்ளூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறையினரால் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பணியின் போது பொது விநியோகத் திட்ட பொருட்களுடன் கூடிய வாகனங்கள் கைப்பற்றுகை செய்யப்பட்டு திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் 6A விசாரணைக்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது மேற்கண்ட வழக்குகளில் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ள கீழ்கண்ட 47 வாகனங்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு குடிமைப் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பதற்கு கடத்தி சென்ற குற்றத்திற்காக அபராதம் விதித்து ஆணையிடப்பட்டது. 

வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வாகன உரிமையாளர்கள் இதுவரை செலுத்தி வாகனங்களை மீட்டு கொள்ளவில்லை. எனவே கீழ்கண்ட 47 வாகனங்களை உரிமை கோரப்படாத வாகனங்களாகக் கருதி அரசுக்கு ஆதாயம் செய்து அவற்றை நேரடி பொது ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே கீழ்கண்ட வாகனங்களை ஏலம் கோர விரும்புபவர்கள் 18.02.2025 அன்று காவல் ஆய்வாளர், குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகம், பூங்கா நகர்,(ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளிஅருகில்) திருவள்ளூர் அருகே நடைபெறும் பொது ஏலத்தில் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் அறிவித்துள்ளார். வாகன விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | எடப்பாடி பழனிசாமி மீது ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

மேலும் படிக்க | பிரசாந்த் கிஷோரால் திமுக ஜெயிக்கல! அமைச்சர் ஐ.பெரியசாமி தடாலடி - சைட்ல தவெகவுக்கும் ஒரு கொட்டு!

மேலும் படிக்க | பாஜகவுக்கு எச்சரிக்கை! பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பகுத்தறிவு பிரச்சாரம் - திமுக அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News