பிப்ரவரி 15 தான் கடைசி தேதி! ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்! ஜாக்கிரதை!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் KYC செயல்முறையை முடிக்க வேண்டும் என்று மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இல்லை என்றால் கார்ட் ரத்து செய்யப்படும்.

1 /6

நம் நாட்டில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. ரேஷன் கார்டு மூலம் இலவசமாக அல்லது குறைந்த விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

2 /6

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள குடும்பங்கள் தங்கள் ரேஷன் கார்டுகளுக்கான KYC செயல்முறையை பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

3 /6

பலர் இந்த தேதி நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்த்தாலும், இந்த காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று அரசாங்கம் தெளிவாக கூறியுள்ளது. மோசடிகளை தவிர்க்க KYC முக்கியம் என்று தெரிவித்துள்ளனர்.

4 /6

உணவு வழங்கல் அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா, இன்னும் 37,000க்கும் அதிகமானோர் தங்கள் KYC செயல்முறையை ஆன்லைனில் முடிக்க வில்லை என்று குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரி 15 க்குப் பிறகு இந்த செயல்முறையை முடிக்காத அனைத்து ரேஷன் கார்டுகளும் ரத்து செய்யப்படும் என்பதால், விரைவில் அதை முடிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

5 /6

இதுவரை புதிய ரேஷன் கார்டுகளுக்கு 6,00,000 புதிய விண்ணப்பங்கள் வந்துள்ளன. ரேஷன் கார்டுகளை தவறான காரணங்களுக்கு பயன்படுத்தினால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.  

6 /6

அதிக பணம் ஈடுப்பவர்கள் ரேஷன் கார்டு வைத்திருக்கக் கூடாது என்று சட்டம் அங்கு உள்ளது. இதனை கடைபிடிக்காத 8,00,000 பேர் மீது வழக்குகள் உள்ளன. இதுவரை 12,000 பேர் தங்கள் ரேஷன் கார்டுகளை விருப்பத்துடன் திருப்பி அளித்துள்ளனர் என்று அரசு தெரிவித்துள்ளது.