Hug Day: காதலரை கட்டிப்பிடிப்பது ஏன் முக்கியம்? தமிழ் சினிமாவின் இந்த 5 சீன்களை பாருங்க புரியும்!

Hug Day 2025: காதல் உறவில் தங்களின் இணையரை கட்டிபிடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்துகொள்ள தமிழ் சினிமாவின் இந்த 5 காட்சிகளை ஹக் டேவான இன்று கண்டிப்பாக பார்க்கவும்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 11, 2025, 10:27 PM IST
  • பிப். 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
  • பிப். 12ஆம் தேதி ஹக் டே கொண்டாடப்படுகிறது.
  • பிப். 7 முதல் பிப். 14 வரை காதலர்களுக்கான வாரம் எனலாம்.
Hug Day: காதலரை கட்டிப்பிடிப்பது ஏன் முக்கியம்? தமிழ் சினிமாவின் இந்த 5 சீன்களை பாருங்க புரியும்! title=

Hug Day 2025, Tamil Cinema Iconic Hugging Scenes: காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இருப்பினும், பிப். 7ஆம் தேதியில் இருந்து காதலை போற்றும் வகையில் அந்த ஒரு வாரம் முழுவதும் கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும். ஒவ்வொரு நாளும் காதலை போற்றும் ஒவ்வொரு அம்சங்களும் கொண்டாடப்படும்.

அந்த வகையில், காதலர்கள் வாரத்தில், பிப். 12ஆம் தேதி என்பது ஹக் டே (Hug Day - கட்டிப்பிடித்தல் தினம்). காதல் உறவில் கட்டிப்பிடித்தலின் அவசியத்தை உணர்த்தும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. கட்டிப்பிடித்தல் காமம் சார்ந்தது மட்டுமின்றி காதல் உறவிலும் சரி, திருமண உறவிலும் சரி இருவரின் உணர்வுகளையும் பிணைக்கும், ஒன்றாகும் ஒரு செயலாகும்.

அப்படியிருக்க, இந்த ஹக் டேவில் உங்களது இணையருக்கு, தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்றிருக்கும் கட்டிப்பிடித்தல் காட்சியை அனுப்ப வேண்டும் என நினைத்தால், இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் 5 பரிந்துரைகள் உங்களுக்கு உதவும். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் திரைப்பட காட்சிகளை உங்களின் இணையருக்கு அனுப்பவதன் மூலம் உங்களின் உணர்வுகளை அழகாகவும், கவித்துவமாகவும் உணர்த்தலாம். அந்த 5 காட்சிகளை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | லவ் ஹார்மோன்களை அதிகரிக்கும் 7 பழக்கங்கள்! படுக்கையறை சுகமும் நிச்சயம்...

Hug Day 2025: 96

காதலர் தினத்தையொட்டி பலரும் இந்த படத்தை பார்ப்பார்கள். கைக்கூடாத காதல் என்றாலும், காதலின் சுகத்தை, காதலின் நினைவை ரசிக்க நிச்சயம் இதை பார்க்கலாம். அப்படியிருக்க, 96 திரைப்படத்தில் த்ரிஷா விஜய் சேதுபதியின் மாணவிகளிடம் கதை சொல்லும் போது இளம் வயது ராம் - ஜானு கதாபாத்திரங்கள் கல்லூரி வாசலில் கட்டிப்பிடிக்கும் காட்சியை விவரிப்பார். கோவிந்த் வசந்த் பின்னணியில் வயலினால் மொத்த உணர்ச்சிகளையும் இரட்டிப்பாக்கியிருப்பார். இந்த காட்சியை உங்கள் இணையருக்கு அனுப்புங்கள். நீண்ட நாள்களாக பார்க்காமல் இருக்கும் காதலர்கள், தொலைவில் இருந்து காதல் உறவில் இருப்பவர்கள் ஆகியோருக்கு இது நெஞ்சை தொடும் காட்சியாக இருக்கும்.

Hug Day 2025: ஓ காதல் கண்மணி

மணிரத்னம் திரைப்படங்களை இந்த விஷயத்தில் ஒதுக்கவே முடியாது. அதில் ஓ காதல் கண்மணியை நிச்சயம் தவறவிட முடியாது. திரைப்படத்தின் இடைவேளை தருணத்தில் இந்த கட்டிபிடித்தல் காட்சியை வைத்திருப்பார். பின்னணியிலும் ஏ.ஆர். ரஹ்மான் இளமை துள்ளலை தூவியிருப்பார். இதனை உங்கள் இணையருக்கு அனுப்பி அவர் மீது அளவு கடந்த ஆசையையும், அன்பையும் வைத்திருப்பதை உணர்த்துங்கள்.

மேலும் படிக்க | Propose Day: காதலை விதவிதமாக சொல்லி க்ரஷ்ஷை கவர் செய்யலாம்! இதை படிங்க..

Hug Day 2025: விண்ணைத் தாண்டி வருவாயா

இதில் கார்த்திக், ஜெஸ்ஸியிடம் காதலை சொல்லிய பின்னர், தனியாக ஒரு வீட்டிற்கு அழைத்து வந்திருப்பார். அப்போது பின்னணியில் ஏ.ஆர். ரஹ்மான் மெதுவாக 'ஊனே... உயிரே... உனக்காக துடித்தேன்... விண்மீனே விண்ணைத்தாண்டி வருவாயா...' என்ற வரிகளை வைத்திருப்பார். முதலில் கார்த்திக் கட்டிப்பிடித்ததும், சில நொடிகளில் விலகி செல்லும் ஜெஸ்ஸி மீண்டும் கார்த்திக் அணைக்க கண்களாலேயே அழைப்பார். அப்போது கார்த்திக் கதாபாத்திரம் சொல்லும்,"என் வாழ்வின் இரண்டு அழகான நிமிடங்கள் இதுதான்" என்று... இந்த காட்சியோடு இந்த வரிகளையும் உங்களின் இணையருக்கு அனுப்பி வையுங்கள்.

Hug Day 2025: ஓ மை கடவுளே

அர்ஜுன், அனு ஆகிய இரண்டு கதாபாத்திரங்களும் இரண்டு காலகட்டங்களை கடந்து கடைசியாக விவாகரத்திற்காக நீதிபதியின் முன் நிற்பார்கள். தனது அத்தனை தவறையும் உணர்ந்த அர்ஜுன், அனு தான் இனி தனது வாழ்க்கை என நீதிபதியிடம் சொல்லி, அனுவிடம் கன்னத்தில் அறை வாங்கிவிட்டு, மகிழ்ச்சியாக முத்தம் கொடுத்துவிட்டு அங்கேயே அனுவை அணைத்துக்கொள்வார். உங்கள் இணையருக்குள் எதாவது சிறு சிறு பிரச்னை இருந்தாலும், இந்த காட்சியை நீங்கள் அனுப்பினால் நிச்சயம் உங்களுக்குள் இருக்கும் பிரச்னைக்கான தீர்வை நோக்கி சென்றுவிடுவீர்கள்.

Hug Day 2025: லப்பர் பந்து

கடந்தாண்டு வெளியாகி சக்கைப்போடு போட்ட இந்த திரைப்படத்தில் கதாநாயகன் - கதாநாயகி காதலை விட, கதாநாயகியின் தாய் - தந்தை இடையேயான நெருக்கம்தான் பலரையும் உருகவைத்தது. அந்த வகையில், யசோதை (ஸ்வாசிகா) கதாபாத்திரம் பூமாலையை (தினேஷ்) விட்டு பிரிந்துசென்று சில நாள்களுக்கு பின் வீடு திரும்பும். 

அப்போது, அறையில் தனது சேலை அனைத்தும் தரையில் கிடப்பதை பார்த்து, நினப்பு வந்தா ஒரு சேலையை எடுக்கமாட்ட... தினமும் ஒரு சேலையை தான் எடுப்பியா என எதார்த்தமாக கேட்க கண்ணீருடன் தினேஷ் ஓடிவந்து கட்டிபிடித்து 'ஏன் என்ன விட்டு போன, இனி இப்படி பண்ணாத' என சொல்லுவார். கட்டிப்பிடிக்காமல் சொல்லியிருந்தாலும் உங்களுக்கு அவரின் உணர்ச்சி புரிந்திருக்கும், கட்டிப்பிடித்து சொன்னதுனால்தான் பலருக்கும் கண்ணீர் வந்திருக்கும்.

மேலும் படிக்க | காதலர் தினத்தில் ரோஜாவின் சிறப்பு என்ன தெரியுமா? பல வண்ண ரோஜாவின் ரகசியங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News