சிஎஸ்கே பிளேயிங் 11ல் இவருக்கு நிச்சயம் இடம் இருக்கும்! யார் இந்த இளம் வீரர்?

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இந்த முறை பல இளம் வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளார். குறிப்பாக இளம் பந்துவீச்சாளர்களை அணியில் எடுத்துள்ளனர்.

Written by - RK Spark | Last Updated : Feb 10, 2025, 06:48 AM IST
  • சிஎஸ்கேயின் புதிய வேகப்பந்து வீச்சாளர்.
  • பிளேயிங் XIல் நிச்சயம் இடம் பெறுவார்.
  • ஐபிஎல் 2025ல் கலக்க இருக்கும் இளம் வீரர்.
சிஎஸ்கே பிளேயிங் 11ல் இவருக்கு நிச்சயம் இடம் இருக்கும்! யார் இந்த இளம் வீரர்? title=

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 தொடர் நெருங்கி வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி முடிந்த அடுத்த சில நாட்களில் ஐபிஎல் 2025 போட்டிகள் தொடங்க உள்ளது. இன்னும் ஐபிஎல் 2025 போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகவில்லை. ஐபிஎல் நிர்வாகம் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர். 10 அணிகளும் போட்டிகளுக்காக தங்கள் தயாரிப்புகளை இறுதி செய்து வருகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றது. பல இளம் வீரர்களை ஒவ்வொரு அணிகளும் போட்டி போட்டு எடுத்தனர். மெகா ஏலத்தில் சில நட்சத்திர வீரர்கள் அணி மாறி உள்ளனர். இதனால் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் சுவாரஸ்யமாக இருக்கும்.

மேலும் படிங்க: சிஎஸ்கே அணிக்கு ஜாக்பாட்; தீபக் சாஹர் இல்லைனா என்ன? இந்த வீரர் சிஎஸ்கேவுக்கு விக்கெட்டை அள்ளி கொடுப்பார் போலயே!

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை இளம் வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர். ஐபிஎல் ஏலத்தில் இளம் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜை ரூ.3.4 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஹரியானவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் கடந்த ஐபிஎல் 2024ல் அறிமுகமானார். மும்பை அணி அவரை மினி ஏலத்தில் எடுத்து இருந்தது. இருப்பினும் அவரது திறனை காண்பிக்க போதிய வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் சமீபத்திய உள்ளூர் தொடர்களில் சிறப்பாக பந்துவீசி வருகிறார் அன்ஷுல் கம்போஜ். எனவே இந்தியன் பிரீமியர் லீக் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் 11ல் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அன்ஷுல் கம்போஜ்?

கிரிக்கெட்டில் ஒரு வீரருக்கு ஃபார்ம் என்பது மிகவும் முக்கியம். சில சீனியர் வீரர்கள் கூட பார்ம் இல்லாமல் தற்போது சிரமப்பட்டு வருகின்றனர். அன்ஷுல் கம்போஜ் சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பையில் ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகள் உட்பட 6 போட்டிகளில் மொத்தமாக 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அன்ஷுல் கம்போஜின் தற்போதைய ஃபார்ம், அவரை சென்னை அணியின் பிளேயிங் 11ல் இடம்பிடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை காட்டுகிறது.

அன்ஷுல் கம்போஜின் பந்துவீச்சில் பார்க்க வேண்டிய முக்கிய விஷயம் அவரது விக்கெட் எடுக்கும் திறன். டி20 போட்டிகளில் விக்கெட்கள் எடுப்பது சிரமம் என்றாலும் சரியான நேரத்தில் விக்கெட்களை எடுத்து கொடுக்கும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எப்போதும் தனி மரியாதை இருக்கும். அன்ஷுல் கம்போஜ் பல முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை கொண்டுள்ளார். இந்தியா U 19, இந்தியா A அல்லது உள்ளூர் தொடர் எதுவாக இருந்தாலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ரஞ்சி டிராபியில் தனது பவர்பேக் பவுலிங் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க  வைத்துள்ளார். சென்னை அணிக்கு பவர் பிளேயில் விக்கெட்களை எடுக்கும் ஒரு பந்து வீச்சாளர் தேவை, அந்த இடத்தை அன்ஷுல் நிச்சயம் நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல்ரவுண்டர்

சென்னை அணியில் ஆல்ரவுண்டர்களுக்கு எப்போதும் தனி மரியாதை இருக்கும். அந்த வகையில் அன்ஷுல் கம்போஜ் பவுலிங்கை தாண்டி பேட்டிங்கிலும் ரன்கள் அடிக்க முடியும். முதல்தர கிரிக்கெட்டில் 21 போட்டிகளில் 46 ரன்கள் உட்பட 399 ரன்கள் எடுத்துள்ளார். தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாகூர் போல லோயர் ஆர்டரில் ரன்கள் அடித்து கொடுக்க முடியும். கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அன்ஷுல் கம்போஜ் மொத்தம் 3 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். சென்னை அணியை பொறுத்தவரை ஒரு போட்டியில் வாய்ப்பு கிடைத்து சிறப்பாக விளையாடினால் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும். அந்த வகையில் அன்ஷுல் கம்போஜ் முதல் போட்டியிலேயே இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிங்க: "கேப்டனின் பங்களிப்பு சரி இல்லை என்றால் டீமும் சரியாக விளையாடாது" - கபில் தேவ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News