RJ Balaji Leaves Suriya 45 Shooting Spot Angry Reason : நடிகர் சூர்யா தன் 45வது படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் ஷூட்டிங்கில் ஏற்பட்ட ஒரு சலசலப்பு குறித்த தகவல் வைரலாக வருகிறது.
முழு வேகத்தில் நடக்கும் படப்பிடிப்பு..!
சூர்யாவை வைத்து அவரது 45 வது படத்தை நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே பாலாஜி இயக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், கோயம்புத்தூரில் இதன் ஷுட்டிங் தொடங்கியது. ஆர்.ஜே பாலாஜி தனது முழு டீமை இறக்கி பரபரப்பாக படப்பிடிப்பு வேலைகளில் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் சில காட்சிகள் படமாக்கப்பட்ட வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோபப்பட்ட ஆர். ஜே பாலாஜி?
சூர்யா 45 படத்திற்காக சமீபத்தில் ஆயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து காட்சிகள் படமாக்கப்பட இருந்ததாம். ஆனால் அந்தக் காட்சிக்கு 400 பேரை மட்டுமே தயார் படுத்த முடிந்ததாம். இதைப் பார்த்து கோபப்பட்ட ஆர் ஜே பாலாஜி, ஷூட்டிங்கை பேக்-அப் செய்ய சொல்லி கிளம்பி விட்டதாக கூறப்படுகிறது. சூர்யா 45 படத்தில், நடிகர் கோதண்டம் சில காட்சிகளில் நடித்திருக்கிறார். அவர் சமீபத்தில் கொடுத்த ஒரு நேர்காணலில், ஆர்.ஜே பாலாஜி குறித்து பேசி இருக்கிறார்.
ஆர் ஜே பாலாஜி ஒவ்வொரு காட்சியும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பாராம். ஒரு காட்சியில் இருக்கும் ஒரு நாற்காலி உடைந்து விட்டு அது ரீடைக் செய்யும் போது வேறு நாற்காலி போட்டால் கூட அதை ஏற்றுக்கொள்ள மாட்டாராம். ஆர். ஜே பாலாஜி, உண்மையாகவே அப்படி கூறினாரா இல்லையா என்பது அந்த ஷூட்டிங்கில் இருந்தவர்களுக்குதான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா 45:
தமிழ் திரை உலகின் முக்கிய நடிகராக வலம் வரும் சூர்யாவின் படங்கள் கடந்த சில ஆண்டுகளாக தியேட்டரில் வெளிவருவது குறைந்து போனது. ஓடிடியில் வந்த அவரது படங்களும் மட்டுமே, மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இருப்பினும் பழைய சூர்யாவை அவரது படங்களில் பார்க்க முடிவதில்லை என்ற ஏயக்கம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதை தீர்த்து வைக்கும் வகையில் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் கமிட்டானார் சூர்யா. அதில் ஒன்று ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் அவரது 45 வது படமாகும்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் ஸ்வசிகா, யோகி பாபு, ஷிவதா, நடராஜன் உள்ளிட்ட பலரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களை நடிக்கின்றனர்.
சூர்யாவுக்கு ஏற்றம் தருமா?
சூர்யா நடிப்பில கடைசியாக வெளிவந்த கங்குவா படம், படுதோல்வியை தழுவியது. இதையடுத்து அவர் சைன் செய்த ரெட்ரோ படம், இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தின் மூலம், சூர்யா கம்-பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கங்குவாவின் தோல்வியில் இருந்து மீள்வதற்கும், கோலிவுட்டில் விட்ட இடத்தை பிடிப்பதற்கும் இந்த இரு படங்களின் மூலமாக சூர்யா முயற்சி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | Suriya 45: சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் RJ பாலாஜி யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ