DMK News Today | கோவையில் இருந்து திருப்பதி சென்ற ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஒருவன் பாலியல் கொடுத்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் அந்த பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயற்சி செய்த நிலையில், அப்பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கே.வி. குப்பத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவரை தமிழ்நாடு காவல்துறை கைது செய்தது.
இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்த சூழலில் இந்த சம்பவம் குறித்து திமுக சில கேள்விகளை எழுப்பியுள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த கேள்வியில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை தமிழ்நாடு அரசு கைது செய்துள்ளது, ஆனால் ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் எங்கே சென்றனர்? என கேள்வி எழுப்பியுள்ளது.
" வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு சில கேள்விகள். கோவையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயிலில் பயணம் சென்ற 4 மாத கர்ப்பிணி பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டவன் தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளான்; ரயிலில் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டிய இரயில்வே பாதுகாப்புப் படை வீரர் எங்கே? ரயில் பயணங்களில் பெண்களின் பாதுகாப்புகாக ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள திட்டங்கள் என்ன?
சமீப வருடங்களில் வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு ரயிலில் கஞ்சா, போதை மாத்திரை, ஹவாலா பணம் கடத்தல், பெண்களிடம் அத்துமீறல் மற்றும் தேர்தலுக்காக பணம் கடத்தி வருதல் என பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன; இதனை தடுக்க ஒன்றிய ரயில்வே அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?. 2014 முதல் 2024 வரை சுமார் 638 க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் நடந்துள்ளன. சராசரியாக ஆண்டுக்கு 71 ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தடுப்பதற்கான, பாதுகாப்பான, விபத்தில்லாத ரயில் சேவைகளை வழங்க ஒன்றிய ரயில்வே அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டுக்கு பல ஆண்டுகளாக ரயில்வே துறையில் போதிய முக்கியத்துவம் வழங்கப்படாமல் இருப்பது ஏன்? நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளது.
மேலும் படிங்க: கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட கொடுமை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ