வேலூர் அருகே வந்து கொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 36 வயது கர்ப்பணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, ஓடும் ரயிலில் இருந்தும் கீழே தள்ளிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை
திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க பெண் டெய்ரலாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில், தற்போது 4 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில், நேற்று (பிப்.06) கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அப்போது, ரயில் வேலூர் மாவட்டம், கேவி குப்பம் அருகே சென்றபோது அந்த பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கத்தி கூச்சலிட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கர்ப்பிணி என்று கூட பாராமல் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி உள்ளார்.
வழக்குப்பதிந்து விசாரணை
இதையடுத்து அந்த நபர் காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கு தலைமறைவானார். இதற்கைடையில் ரயிலில் இருந்து கீழே விழுந்த அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் படிங்க: பள்ளிகளில் அதிகரிக்கும் குற்றங்கள்... இனி இதுதான் தண்டனை - அன்பில் மகேஷ் எச்சரிக்கை!
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து ஹேமராஜ் என்பரை கைது செய்தனர். மேலும், இந்த நபர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருந்தது தெரியவந்துள்ளது. போலீசார் இவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக டிஜிபிக்கு உத்தரவு
இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தமிழக டிஜிபியிடன் மகளிர் ஆணையம் விரிவான அறிக்கை கேட்டதோடு தாமாக முன் வந்து விசாரணை தொடங்கி உள்ளது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
சென்னை அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண் ஒருவரை கொடூரமாக பாலியல் தொல்லைக்கு ஆளானதை தேசிய மகளிர் ஆணையம் கண்டிக்கிறது. பெண்களின் பெட்டியில் பயணித்தபோதும், இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியது மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுப்புகிறது.
தேசிய மகளிர் ஆணைய தலைவர் உத்தரவின்படி இத்தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். அதுமட்டுமல்லாது விரிவான விசாரணை அறிக்கையை எப்ஐஆர்-யுடன் 3 நாட்களுக்குள் தக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிங்க: கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட கொடுமை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ