டெல்லியில் கருத்துக்கணிப்பு மெய்யாகுமா? 2020இல் Exit Poll கணித்ததும், நடந்ததும் இதோ!

Delhi Assembly Election 2025: டெல்லி 2025 தேர்தல் நிறைவடைந்ததும் கருத்துக்கணிப்புகள் வெளியாகி பாஜகவே வெற்றி பெறும் என கணித்து வருகின்றன. அந்த வகையில், 2020இல் கருத்துக்கணிப்புகள் கணித்தது என்ன, நடந்தது என்ன என்பதை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 6, 2025, 10:22 AM IST
  • 10இல் 7 கருத்துக்கணிப்புகள் தற்போது பாஜக ஆட்சியை கைப்பற்றும் என கணிப்பு
  • காங்கிரஸ் அதிகபட்சமாக 3 இடங்களையே வெல்லும் என கணிப்பு
  • 20-25 இடங்களில் ஆம் ஆத்மிக்கும், பாஜகவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
டெல்லியில் கருத்துக்கணிப்பு மெய்யாகுமா? 2020இல் Exit Poll கணித்ததும், நடந்ததும் இதோ! title=

Delhi Assembly Election 2025, Exit Polls: 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (பிப். 5) ஒரே கட்டமாக நடைபெற்றது. மும்முனை போட்டியாக இருந்தாலும் ஆம் ஆத்மி கட்சி - பாஜக இடையேதான் உச்சபட்ச போட்டி இருக்கிறது எனலாம். நேற்று வாக்குப்பதிவு நிறைவடைந்த உடனேயே, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

கருத்துக்கணிப்புகளின் படி, 1998ஆம் ஆண்டுக்கு பின் பாஜக டெல்லி சட்டப்பேரவையை கைப்பற்றும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. 2013ஆம் ஆண்டுக்கு பின் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த ஆம் ஆத்மி கட்சி இம்முறை ஆட்சியை பறிகொடுக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Delhi Election Exit Poll: Zee News கருத்துக்கணிப்பு

Zee News-ICPL கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி 33-38 இடங்களை கைப்பற்றலாம் என்றும் பாஜக 31-36 இடங்களை கைப்பற்றலாம் என்றும் காங்கிரஸ் 0-2 இடங்களில் வெற்றி பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் ஆட்சி அமைப்பதில் கடுமையான போட்டி நிலவும் என தெரிகிறது. ஆட்சி அமைக்க அதிகபட்சமாக 36 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். கருத்துக்கணிப்புகள் துல்லியமானவை அல்ல, மாற்றங்களுக்கு உட்பட்டதுதான் என்பதை கடந்த காலங்களில் கண்டிருக்கிறோம்.

மேலும் படிக்க | டெல்லியில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? வெளியானது கருத்து கணிப்புகள்!

Delhi Election Exit Poll: பாஜக வெற்றி என பலரும் கணிப்பு

அதுமட்டுமின்றி, வெளியான 10 கருத்துக்கணிப்புகளில் பெரும்பான்மையாக, அதாவது 7 கருத்துக்கணிப்புகள் பாஜகவே டெல்லியில் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்துள்ளன. பாஜகவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் 20-25 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவலாம் என தெரிவிக்கும் இந்த கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் 3 தொகுதிகள் வரை கைப்பற்றவே வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளன. இருப்பினும், ஆம் ஆத்மி கட்சி இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை முற்றிலும் மறுத்துள்ளது.

Delhi Election Exit Poll: மறுக்கும் ஆம் ஆத்மி கட்சி

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சுஷில் குப்தா கூறுகையில், "இது எங்களது நான்காவது தேர்தல், ஒவ்வொரு முறையும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்காது என்றே கூறி உள்ளன. அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்காக உழைத்துள்ளார். ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக முடிவுகளை எதிர்பார்க்கிறோம். நாங்களே ஆட்சி அமைப்போம்" என்றார்.

Delhi Election Exit Poll: 2020 கருத்துக்கணிப்புகள் கணித்தது என்ன?

அந்த வகையில், கடந்த 2020ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இதே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எவ்வாறு கணித்தன, என்ன நடந்தது என்பதை இங்கு விரிவாக காணலாம்.

2020ஆம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் India Today-Axis My India கருத்துக்கணிப்பு ஆம் ஆத்மி 59-68 இடங்கள், பாஜக 2-11 இடங்கள் என கணிக்கப்பட்டது. Times Now கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி 47 இடங்கள், பாஜக 23 இடங்கள் என கணிக்கப்பட்டது. ABP News-C Voter கருத்துககணிப்பில் ஆம் ஆத்மி 49-63 இடங்கள், பாஜக 5-19 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டது Republic TV-Jan Ki Baat கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி 48-61 இடங்கள், பாஜக 9-21 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டது.

Delhi Election Exit Poll: 2020 தேர்தலில் நடந்தது என்ன?

இந்த கணிப்புகள் அனைத்தும் மெய்யாகின. 2020இல் ஆம் ஆத்மி கட்சி 70க்கு 62 இடங்களை கைப்பற்றின. பாஜக 8 இடங்களை கைப்பற்றியது. 1998ஆம் ஆண்டில் இருந்து 2013ஆம் ஆண்டுவரை அதாவது 15 ஆண்டுகள் டெல்லியை ஆட்சி செய்த காங்கிரஸ் ஒரு தொகுதியை கூட கைப்பற்றவில்லை.

இருப்பினும், எல்லா நேரத்திலும் கருத்துக்கணிப்புகள் சரியான கணிப்பை தராது. முடிவுகளில் மாற்றம் ஏற்படலாம் என்பதையும் வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | Delhi Election 2025: டெல்லியில் இங்குதான் அதிக வாக்குப்பதிவு... காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News