EPFO Update: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இபிஎஃப் குறைந்தபட்ச ஓய்வூதியத்தொகையை அரசு அதிகரிக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. ஆகையால் இபிஎஃப் உறுபினர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களின் நம்பிக்கை
எனினும், இந்த அறிவிப்பு வரும் என்ற நம்பிக்கை இன்னும் ஊழியர்கள் மத்தியில் உள்ளது. அரசாங்கம் விரைவில் தங்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை அதிகரிக்கும் என்று இபிஎஃப் சந்தாதாரர்கள் நம்புகிறார்கள். பிஎஃப் ஊழியர் அமைப்புகள் நீண்ட காலமாக தங்கள் ஓய்வூதியத் தொகையை ரூ.7500 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரி வருவது குறிப்பிடத்தக்கது.
Unified Pension Scheme: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்
மோடி அரசாங்கம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமான UPS-ஐ அங்கீகரித்ததிலிருந்து, குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கை வேகம் பெற்று வருகிறது. தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை ரூ.1,000 ஆக உள்ளது. இது ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டால், அது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும். இது குறித்து அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் கூறவில்லை. எனினும், தனியார் துறை ஊழியர்களுக்காக அரசாங்கம் இந்த நல்ல முடிவை விரைவில் எடுக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Employee Pension Scheme: ஊழியர் ஓய்வூதியத் திட்டம்
சுமார் 78 லட்சம் ஊழியர்கள் EPS இன் கீழ் ஊழியர் ஓய்வூதியத்தின் பலனைப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை அதிகரிக்கும் விருப்பம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை ரூ.5000 ஆக உயர்த்தக் கோரி பிஎஃப் ஊழியர்களின் சில அமைப்புகள் கோரியுள்ளன. எனினும், ஊழியர்கள் ரூ.5000 கூட போதாதென்றும் இது ரூ.7,500 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.
இதற்கு முன்னர், 2014 ஆம் ஆண்டில், குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டது. சில வருடங்களுக்குப் பிறகு, ஊழியர்கள் அதை அதிகரிக்கக் கோரத் தொடங்கினர். எனினும், இதை இன்னும் அரசாங்கம் செய்யவில்லை. இந்த ஆண்டு இது கண்டிப்பாக நடக்கும் என நம்பப்படுகின்றது.
EPS Pension: இபிஎஸ் ஓய்வூதியம்
- ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பெற விரும்பும் ஊழியர்கள் இபிஎஃப் உறுப்பினர்களாக (EPF Members) இருக்க வேண்டியது அவசியம். அதாவது அவர்களிடம் ஒரு இபிஎஃப் கணக்கு (EPF Account) இருக்க வேண்டும்.
- பணியாளர் ஒரு தனியார் துறையில் பணிபுரிபவராக இருக்க வேண்டும்.
- 58 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெற முடியும்.
- EPS கணக்கில் நிறுவனத்தின் பங்களிப்பாக 8.33% செலுத்தப்படுகின்றது. மேலும் மாதத்திற்கு ரூ.15,000 வரை சம்பளத்தில் 1.16% மத்திய அரசால் பங்களிக்கப்படுகிறது.
- ஊழியரின் 12 சதவீத பங்களிப்பு முழுவதும் EPF கணக்கிற்கு செல்கிறது.
- இந்தத் தொகை ஊழியரின் மொத்த சம்பளத்திலிருந்து கழிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | புதிய வருமான வரி மசோதா... எளிமையான சட்டங்கள், எளிமையான மொழி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ