EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வந்துள்ளது. யுனிவர்சல் கணக்கு எண்ணை செயல்படுத்துதல், அதாவது ஆக்டிவேட் செய்வது மற்றும் வங்கிக் கணக்குகளில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முந்தைய சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்த ஜனவரி 15 காலக்கெடு இப்போது மாற்றப்படும் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
EPFO ELI UAN Activation
வியாழக்கிழமை EPFO இன் சமீபத்திய சுற்றறிக்கை படிவத்தில் கொடுக்கப்பட்ட காலக்கெடு நீட்டிப்பின்படி, இந்த பணியை செய்து முடிக்க இன்னும் எட்டு நாட்களே உள்ளன.
UAN -ஐ ஏன் ஆக்டிவேட் செய்ய வேண்டும்?
2024-25 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் (Employment Linked Incentive Scheme) பலன்களைப் பெற, ஊழியர்கள் தங்கள் யுனிவர்சல் கணக்கு எண்ணைச் செயல்படுத்தி, தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதாரை முழுமையாக இணைக்க வேண்டும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், ஆதார் அடிப்படையிலான OTP ஐப் பயன்படுத்தி UAN செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான செயல்முறை என்ன?
- இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) தங்கள் போர்ட்டலில் லாக் இன் செய்து, வங்கிக் கணக்குகளுடன் UAN செயல்படுத்துதல் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பது ஆகிய இரு பணிகளையும் செய்யலாம்.
- இணையதளத்தில் 'Member UAN/ Online Services' என்பதன் கீழ் 'Activate UAN' பிரிவை பயனர் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- அதன் பிறகு ஆதார் அடிப்படையிலான OTP சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க வேண்டும்.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு உதவும் செயல்முறை
இந்த செயல்முறை ஊழியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை நிர்வகிக்க உதவும். மேலும், ஊழியர்கள் PF பாஸ்புக்கைப் பதிவிறக்கம் செய்தல் மற்றும் ஆன்லைன் க்ளெய்ம்களை சமர்ப்பித்தல் போன்ற சேவைகளைப் பெற UAN செயல்படுத்தல் மற்றும் வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு ஆகியவற்றை செய்து முடிக்க வேண்டியது அவசியமாகும். நடப்பு நிதியாண்டில் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் ஆதார் அடிப்படையிலான OTP மூலம் UAN செயல்படுத்தும் செயல்முறையை முடிக்க முதலாளிகள் / நிறுவனங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ELI Scheme: இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன?
வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்திலிருந்து பயனடைய UAN செயல்படுத்தல் மற்றும் வங்கிக் கணக்கில் ஆதார் சேர்க்கை செய்யப்பட வேண்டியது கட்டாயம் என முந்தைய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. EPFO இன் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் ஆதாரை தங்கள் UAN உடன் இணைக்க வேண்டும். உறுப்பினர் போர்ட்டலில் லாக் இன் செய்து இந்த நடைமுறையை செய்யலாம்.
Direct Benefit Transfer
ஆதார் மற்றும் UAN ஐ இணைப்பது ஊழியர் PF பாஸ்புக்குகளைப் பதிவிறக்கம் செய்யவும், ஆன்லைனில் பணம் எடுக்கும் க்ளெய்ம்களை சமர்ப்பிக்கவும், தனிப்பட்ட விவரங்களைப் புதுப்பிக்கவும், பணம் எடுக்கும் நிலையைக் கண்காணிக்கவும் அனுமதிக்கும். மேலும், நேரடிப் பலன் பரிமாற்றத்திற்கு, உறுப்பினர்கள் தங்கள் வங்கிக் கணக்கை UAN உடன் இணைக்க வேண்டும். இதனால் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்கு பண பரிமாற்றங்கள் செய்யப்படும்.
தற்போது இதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், உறுப்பினர்கள் தங்கள் கணக்குகள் ELI மற்றும் DBT மூலம் பயனடையும் வகையில் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். அப்படி இணைக்கப்படவில்லை என்றால் காலக்கெடுவிற்குள் இதை செய்து முடிப்பது நல்லது.
மேலும் படிக்க | Income Tax Act: பண பரிவர்த்தனை விதிகள்... வரம்பை மீறினால் 100% அபராதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ