வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம்! 5 ஆண்டுக்கு பிறகு RBI எடுத்த அதிரடி முடிவு

RBI Governor Sanjay Malhotra Latest News: வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன் உட்பட வங்கியில் கடன் வாங்கியுள்ளவர்களுக்கு முக்கிய செய்தி. ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து அறிவிப்பு.

Reserve Bank of India Repo Rate: 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை குறித்த இந்திய ரிசர்வ் வங்கி. இனி மாத தவணை குறையும். வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது.

1 /8

கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி தொடங்கியா இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) நிதி கொள்கைக் குழு கூட்டம் இன்றுடன் (பிப்ரவரி 7)  நிறைவடைந்தது. இந்த நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது. ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன? ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் யாருக்கு என்ன நன்மை? ரெப்போ வட்டி விகிதம் எத்தனை புள்ளிகள் குறைக்கப்பட்டது? போன்ற அனைத்து விவரங்களையும் பார்ப்போம்.

2 /8

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ரிசர்வ் வங்கியால் முதல் முறையாக ரெப்போ வட்டி (Repo Rate) விகிதமானது குறைக்கப்பட்டிருக்கிறது. அந்த குறைப்பினுடைய விகிதத்தை பொறுத்தவரையில் இதற்கு முன்பு 6.50 விழுக்காடாக இருந்த ரெப்போ வட்டி விகிதமானது தற்போது 6.25 விழுக்காடாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து, தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.25 விழுக்காடாக உள்ளது. 

3 /8

ரெப்போ வட்டி விகித குறைப்பால் பலன் அடையக்கூடியவர்கள் யார் என்றால், வங்கிகள் மூலமாக கடன் பெற்றவர்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், வங்கியில் கடன் வாங்கிய அனைத்து விதமான கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்பதால், கடன் வாங்கிய அனைவரும் பயன் அடைவார்கள். 

4 /8

சமீபத்தில் தான் ரிசர்வ் வங்கி கவர்னராக சஞ்சய் மல்கோத்ரா பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பிறகு முதல் நிதிக் கொள்கை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 

5 /8

நிதிக் கொள்கை அறிவிப்பின் ஒரு பகுதியாக ரெப்போ வட்டி தொடர்பான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அந்த அறிவிப்பில் தான் 6.25 விழுக்காடாக இருந்த ரெப்போ வட்டி விதமானது குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். 

6 /8

ரெப்போ வட்டி விகிதம் 0.25 விழுக்காடு குறைக்கப்பட் காரணத்தால் வங்கிகளிடம் இருந்து கடன் பெற்றவர்கள் குறிப்பாக வாகன கடன், வீட்டுக்கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட அனைத்து விதமான கடன்களுக்கும் செலுத்தக்கூடிய வட்டியின் தொகை குறையும். இந்த அறிவிப்பு என்பது அனைத்து மக்களுக்கும் ஒரு வரவேற்பு மிகுந்த அறிவிப்பாகத்தான் பார்க்கப்படுகிறது. 

7 /8

சமீபத்தில் மத்திய பட்ஜெட்டின் போது கூட தனிநபர் வருமான வரி (Personal Income Tax) வீதத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டு ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொண்டவர்களுக்கு வருமான வரி இல்லை என்ற அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக ரெப்போ வட்டி வீதம் குறைக்கப்பட்டிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

8 /8

ரெப்போ வட்டி விகிதம் என்ன எனப் பார்த்தால், இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதத்தை தான் ரெப்போ விகிதம் என அழைக்கப்படுகிறது. வங்கிகள் கடன் கொடுக்கும் போது ஆர்பிஐ வட்டி விதிக்கிறது. அதன் காரணமாக வங்கிகளும் தங்களிடம் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து வட்டி வசூலிக்கிறார்கள். இதனால் தான் ரெப்போ வட்டி விகிதம் மாற்றத்தால் வங்கியில் கடன் வாங்குபவர்களின் வட்டியில் மற்றம் செய்யப்படுகிறது.