பிரதமர் இளம் சாதனையாளர்கள் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI) என்பது, பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EBC), மற்றும் சீர்மரபினர் (DNT) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்தர கல்வி வழங்குவதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். PM YASASVI Scholarship என்பது "Prime Minister Young Achievers Scholarship Award Scheme for Vibrant India" என்பதன் சுருக்கம் ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம், மாணவர்கள் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி செலவுகளை நிதியுதவி மூலம் பெறலாம்.
தகுதிகள்:
மாணவர்கள் OBC, EBC, அல்லது DNT பிரிவுகளைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட 'மேம்பட்ட பள்ளிகள்' (Top Class Schools) என அடையாளம் காணப்பட்ட பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து வர வேண்டும்.
நிதி உதவி:
9ஆம் மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் அதிகபட்சம் ரூ.75,000/- வரை.
11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை.
இந்த நிதி உதவி, பள்ளி கட்டணம், விடுதி கட்டணம், மற்றும் பிற தேவைகளைக் கையாள பயன்படுத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
* மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை போர்டல் (National Scholarship Portal) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்: https://scholarships.gov.in/
* புதிய விண்ணப்பதாரர்கள் 'New Registration' என்பதைக் கிளிக் செய்து, தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும்.
* ஏற்கனவே பதிவு செய்திருந்தால், 'Fresh Application' என்பதைக் கிளிக் செய்து, உள்நுழைந்து விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
தேர்வு ; YASASVI ENTRANCE TEST என்ற தேர்வு மூலம் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை கிடைக்கும்.
தேவையான ஆவணங்கள்:
ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், வருமான சான்றிதழ், முகவரி சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வங்கிக் கணக்கு விவரங்கள்
அரசு பள்ளி மாணவர்கள் படிக்கும் பள்ளி வழியாக விண்ணப்பிக்க முடியுமா?
ஆம், அரசு பள்ளி மாணவர்கள் அவர்கள் படிக்கும் பள்ளியின் வழியாக PM YASASVI Scholarship திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். மாணவர்கள் தங்களது பள்ளியில் உள்ள பதிவு நபர் (Nodal Officer) அல்லது Scholarship Coordinator மூலம் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம்.
PM YASASVI Scholarship திட்டத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாமா?
PM YASASVI Scholarship திட்டத்திற்கு தனியார் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது. இந்தத் திட்டம், அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் (Government and Government-aided schools) படிக்கும் OBC, EBC மற்றும் DNT பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
மேலும் படிக்க | கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
மேலும் படிக்க | கல்லூரி மாணவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ