PPF முதல் SSY வரை... ரெப்போ விகித குறைப்பினால் முதலீட்டிற்கான வட்டி குறையுமா...

மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி பெஞ்ச்மார்க் பாலிசி ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளதால், சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தையும் நிதி அமைச்சகம் குறைக்கலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 8, 2025, 10:14 AM IST
  • புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் மாதத்திற்கு முன் அறிவிக்கப்படும்
  • மார்ச் 2025 காலாண்டிற்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை
  • சிறுசேமிப்பு திட்டங்களுக்கான தற்போதைய வட்டி விகிதங்கள்
PPF முதல் SSY வரை... ரெப்போ விகித குறைப்பினால் முதலீட்டிற்கான வட்டி குறையுமா... title=

பொது வருங்கால வைப்பு நிதி (PPF), தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் போன்ற சிறு சேமிப்பு திட்டங்கள், பங்குச் சந்தையின் ஏற்ற தாழ்வுகளிலிருந்து பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களாகவும், கவர்ச்சிகரமான வருமானம் கொடுக்கும் திட்டங்களாகவும். இருப்பினும், அடுத்த 2026 நிதியாண்டில், இந்தத் திட்டங்களின் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியை சந்திக்க நேரிடலாம். 

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாகக் குறைத்துள்ளது

மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி பெஞ்ச்மார்க் பாலிசி ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளதால், சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தையும் நிதி அமைச்சகம் குறைக்கலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) இன்று பிப்ரவரி 7ஆம் தேதி ரெப்போ விகிதத்தை 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாகக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் மாதத்திற்கு முன் அறிவிக்கப்படும்

ரெப்போ விகிதத்தை குறைப்பது பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என்றும், FD வட்டி விகிதங்கள் குறையலாம் என்றும் மூத்த அதிகாரி கூறினார். தற்போது சிறு முதலீட்டாளர்கள் சிறுசேமிப்புகளுக்கு அதிக வட்டி பெறுகின்றனர். ஒருவகையில், சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களைக் குறைப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவற்றின் வட்டி விகிதங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஏப்ரல் 1, 2025க்கு முன் அறிவிக்கப்படும். 

மார்ச் 2025 காலாண்டிற்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை

முன்னதாக, மார்ச் 2025 காலாண்டிற்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சகம் டிசம்பர் 31 அன்று அறிவித்தது. தொடர்ந்து நான்காவது காலாண்டில் இதில் எந்த மாற்றமும் இல்லை. பொதுவாக இது ஒரே மாதிரியான முதிர்ச்சியுள்ள அரசாங்கப் பத்திரங்களின் சந்தை இலாபங்களால் தீர்மானிக்கப்படுகிறது, ஆனால் சில காலமாக சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதத்திற்கும் அரசாங்கப் பத்திரங்களின் மூலம் கிடைக்கும் இலாபங்களுக்கும் இடையிலான இணைப்பு பலவீனமடைந்துள்ளது.

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான தற்போதைய வட்டி விகிதங்கள்

தற்போது, ​​சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் ஆண்டுக்கு 8.2 சதவீதம், மூன்றாண்டு கால டெபாசிட்டில் 7.1 சதவீதம், பிபிஎப் திட்டத்தில் 7.1 சதவீதம், தபால் அலுவலக சேமிப்பு வைப்பு திட்டங்களில் 4 சதவீதம், கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 7.5 சதவீதம், 115 மாதங்களில் முதிர்வு பெறும் கிசான் விகாஸ் பத்திரத்தில் 7.7 சதவீதம், தேசிய சேமிப்பு (என்எஸ்சி சான்றிதழ்), திட்டத்தின் வட்டி விகிதம் 7.4 சதவீதம் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில், வட்டி 8.2 சதவீதம் என்ற அளவில் வட்டி விகிதங்கள் உள்ளன.

மேலும் படிக்க | EPFO ELI Scheme: காலக்கெடு நீட்டிப்பு.... திட்டத்தின் பலன்களை பெற இதை செய்துவிடுங்கள்

மேலும் படிக்க | Income Tax Act: பண பரிவர்த்தனை விதிகள்... வரம்பை மீறினால் 100% அபராதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News