ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வெற்றியை நோக்கி திமுக? மேஜிக் செய்யுமா நாம் தமிழர் கட்சி

Erode East By Election Result 2025 News: ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளதால், அந்த பகுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 8, 2025, 08:06 AM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வெற்றியை நோக்கி திமுக? மேஜிக் செய்யுமா நாம் தமிழர் கட்சி title=

Erode East By Election Latest Updates: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலின் முடிவு இன்று அறிவிக்கப்படும். பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் 67.97% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இது 2023 இல் நடைபெற்ற இடைத்தேர்தலுடன் ஒப்பிடும்போது சுமார் 7% குறைவு. ஆனால் வாக்கு சதவீதம் குறைந்த போதிலும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக தேர்தலைப் புறக்கணித்ததைக் கருத்தில் கொண்டு, வாக்குப்பதிவு ஒப்பீட்டளவில் அதிகமாகவே இருந்தது. 

அதிமுக, பாஜக, தவெக போன்ற முக்கிய கட்சிகள் போட்டியிடததால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் போட்டி என்பது ஆளும் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு இடையே இருந்தது.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. ஆர்வமுள்ள வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் சீக்கிரமாக வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். காலை 9 மணிக்கு, சுமார் 10% வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். வாக்குப்பதிவு படிப்படியாக அதிகரித்து, காலை 11.00 மணிக்கு 24% ஆகவும், பிற்பகல் 1 மணிக்கு 42% ஆகவும் இருந்தது. 

வாக்குப்பதிவு முடிந்ததும், பதிவுசெய்யப்பட்ட 2.26 லட்சம் வாக்காளர்களில் 1.44 லட்சம் பேர் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி இருந்தனர். இறுதி வாக்குப்பதிவாக 67.97% ஆக இருந்தது. தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு செயல்முறையை "அமைதியாகவும் சுமூகமாகவும்" இருந்ததாக விவரித்தனர். குறிப்பிடத்தக்க இடையூறுகள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறியிருந்தனர்.

திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் சூரம்பட்டியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். அவரை எதிர்த்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எம்.கே. சீதாலட்சுமி, பல வாக்குச்சாவடிகளுக்குச் சென்று, திமுக நிர்வாகிகளால் எங்கள் பூத் முகவர்கள் அச்சுறுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தக் குற்றச்சாட்டிற்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையான புகார் அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

ஆனால் மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜ கோபால் சுங்கரா, இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார், வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன என்பதை சுட்டிக்காட்டினார். கள்ள ஓட்டு போடுவதாக கூறிய குற்றசாற்றுக்களை அவர் நிராகரித்தார். மேலும் பூத் முகவர்கள் மிரட்டப்படுவாதாக நாம் தமிழர் கட்சி கிகூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறினார்.

வாக்கெடுப்பு முடிந்ததும், திமுக வேட்பாளர் சந்திரகுமார் கூறுகையில், எங்களுக்கு தான் வெற்றி என வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இதற்கிடையில், இடைத்தேர்தலைப் புறக்கணிக்க கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவு இருந்தபோதிலும், சில அதிமுக தொண்டர்கள் வாக்களிப்பில் பங்கேற்றதாக ஒரு அதிமுக நிர்வாகி ஒப்புக்கொண்டார். 

பல வாக்காளர்கள் தேர்தலை சாதி அடிப்படையிலான போட்டியாகக் கருதினர், திமுகவின் சந்திரகுமார் முதலியார் சமூகத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி கவுண்டர் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தினர். இதன் விளைவாக, தேர்தலை புறக்கணிக்கிறோம் என் அறிவித்த கட்சிகளை சேர்ந்த பல வாக்காளர்கள் சாதி விருப்பத்தின் அடிப்படையில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

சட்டம் ஒழுங்கை பராமரிக்க, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டனர், மேலும் தொகுதி முழுவதும் 600 துணை ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டனர். 237 வாக்குச்சாவடிகளில் இருந்து அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள சித்தோடில் உள்ள சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. கட்சி முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறை சீல் வைக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் அவசியமானது. வாக்குப்பதிவு செயல்முறை முடிவடைந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வாக்காளர்களின் முடிவு வெளியிடப்படும். பிப்ரவரி 8 ஆம் தேதி (சனிக்கிழமை) அனைவரின் கவனமும் இப்போது உள்ளது.

மேலும் படிக்க - Election Results 2025 LIVE யாருக்கு வெற்றி? ஈரோடு கிழக்கு, டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை! முக்கிய அப்டேட்

மேலும் படிக்க - ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் அறிவிப்பு - அதிமுக புறக்கணிப்பு..!

மேலும் படிக்க - வாக்கு எண்ணிக்கை | டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2025 எப்போது? ​​எங்கு? பார்க்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News