Valentine Week 2025 Propose Day : உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, பிப்., 8ஆம் தேதியான இன்று, ப்ரப்போஸ் டே-வாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில், உங்கள் க்ரஷ்ஷிற்கு விதவிதமாக மெசஜ் செய்து கவரலாம். அதற்கான டிப்ஸை இங்கு பார்ப்போம்.
காதலர் தினம்:
காதலர் தினம், காதலர்களுக்கு மட்டும்தான் சொந்தமா என்ன? காதலில் தோற்றவர்களுக்கும், காதல் ரிலேஷன்ஷிப்பில் இல்லாதவர்களுக்கும், காதலித்து திரும்ப காதலிக்கப்படாதவர்களுக்கும் என அனைவருக்கும் சொந்தமானதுதான் இந்த காதலர் தினம். இப்போது அதில் புதிய ட்ரெண்டாக, இந்த தினம் வரும் முழு வாரத்திலும் ஒவ்வொரு நாள், ஒவ்வொரு தினமாக கொண்டாடப்படுகிறது. அப்படி கொண்டாடப்படும் தினங்களில், ப்ரப்போஸ் டேவும் ஒன்று. இந்த தினத்தில் உங்கள் க்ரஷ்ஷிடம் காதலை எப்படியெல்லாம் கூறலாம்? இதோ டிப்ஸ்.
ப்ரப்போஸ் டே:
காதலை சொல்வதற்கும், அதில் நிராகரிக்கப்பட்டாலும், ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் தாங்கிக்கொள்ளும் மனம் கொள்வதற்கும் ஒரு சக்தி வேண்டும். இது காதலை தெரிவிக்கும் நாள் மட்டுமல்ல, காதலர்கள் அல்லது கணவன் மனைவிக்குள் இருக்கும் உறவானது, எவ்வளவு உன்னதமானது என்பதை தெரிந்துகொள்ளவும் இந்த ப்ரப்போஸ் டே விளங்குகிறது. இதை நினைவூட்டும் இந்த ப்ரப்போஸ் டே-வில், உங்கள் காதலுக்குரிய நபருக்கு, எந்த மாதிரியான ப்ரப்போஸல்களை தெரிவிக்கலாம்?
என்னெல்லாம் சொல்லலாம்?
- என் இதயத்தில் ஏதோ ஒன்று குறைந்தது போல உள்ளது, நீ வந்து அதை நிறைவு செய்வாயா?
- நீ இல்லாமல் என் வாழ்வே முழுமை அடையாது, நீ எனதாக வாழ்நாள் முழுவதும் இருப்பாயா?
- இன்று, நேற்று, நாளை என, எனது எல்லாமே நீதான். என்னை திருமணம் செய்து கொள்வாயா?
- உன்னுடன் இருக்கும் அனைத்து நிமிடங்களும் கனவு போல உள்ளது. அந்த கனவை நிஜமாக்க, என்னுடனேயே இருப்பாயா?
- எனக்கு காதலில் நம்பிக்கை வர காரணமே நீதான்!
- என் இதயம் உனக்காகத்தான் துடிக்கிறது, நீ அதை பத்திரமாக பார்த்துக்கொள்வாயா?
- வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு உண்ணை காதலிக்கிறேன், நீ என்னுடனேயே இருப்பாயா?
- இருளான எனது நாட்களில் ஒளியாக இருப்பது நீதான், வீட்டிலும் விளக்கேற்ற வருவாயா?
- இதயம், உடல், பொருள், ஆவி, அனைத்திலும் நீதான்! நீ எனதாக கடைசிவரை இருப்பாயா?
- உனக்காகத்தான் என் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன், என் கனவுகளை நிஜமாக்க வருவாயா?
- நான் இப்படி இதற்கு முன்பு உணர்ந்ததே இல்லை, என்னை இதே போல் வாழ்நாள் முழுவதும் உணர செய்வாயா?
- நீ எங்கு சென்றாலும் என் மனது உன்னுடனேயே இருக்கும், நீ எப்போதும் எனதருகில் இருப்பாயா?
- உன்னில் நான் விழுந்து விட்டேன், மீண்டும் எழ விருப்பமே இல்லை.
- நீ என்ன மந்திரவாதியா? உன்னை நான் பார்க்கும் போதெல்லாம், என்னை சுற்றி இருப்பவை மறைந்து போய் விடுகிறது.
- நான் கவிதை எழுதும் ஆள் அல்ல, ஆனால் உனக்காக ஒரு நல்ல காதல் கதையையே எழுதுவேன், அதில் நாயகியாக இருக்க சம்மதமா?
- உன்னை நான் சந்தித்ததுதான், இந்த வாழ்க்கையிலேயே செய்த உருப்படியான ஒரே விஷயம்.
- உன்னுடன் இருந்தால் உலகையே வென்ற தெம்பு கிடைக்கிறது. இப்படி தினமும் உணர வேண்டும் என நினைக்கிறேன்.
மேலும் படிக்க | ரோஸ் டே-கிஸ் டே எப்பாே? காதலர் தினத்துக்கு முன் இதெல்லாம் தெரிஞ்சு வெச்சுக்கோங்க..
மேலும் படிக்க | Proposal Day 2024: காதலை டிசைன் டிசைனாக சொல்லி க்ரஷ்ஷை கவரலாம்! டிப்ஸ் இதோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ