இங்கிலாந்துக்கு எதிராக கட்டாக்கில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். தனது 33வது வயதில் இந்திய அணியில் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி உள்ளார். முதலில் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி இல்லை. ஆனால் டி20 தொடரில் சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்தை திணறடித்த காரணத்தினால் ஒருநாள் தொடர் தொடங்கும் 2 நாட்களுக்கு முன்பு வருண் இந்திய அணியில் இணைந்தார். முதல் ஒருநாள் போட்டியில் விளையாடாத வருணுக்கு 2வது ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபி 2025: விளையாடாத நட்சத்திர வீரர்கள்.. முழு பட்டியல் இதோ!
சாம்பியன்ஸ் டிராபியில் வருண்?
சாம்பியன்ஸ் டிராபிக்காண அணியிலும் வருணின் பெயர் இல்லை. இந்நிலையில் ஐசிசி தொடர் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் வருண் சக்ரவர்த்தியை அணியில் சேர்ப்பார்களா மாட்டார்களா என்பது இன்னும் தெரியவில்லை. பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டிகள் நடைபெற்றாலும், இந்திய அணி ஐக்கிய அரபில் மட்டுமே விளையாட உள்ளது. ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபிக்கான அணி அறிவிக்கப்பட்டு இருந்தாலும் பிசிசிஐ கடைசி நிமிட மாற்றங்களை கொண்டு வரலாம். இன்னும் சில நாட்களில் மாற்றப்பட்ட அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக வயதில் அறிமுகமான வீரர்!
வருண் சக்கவர்த்தி தனது 33வது வயதில் இந்திய அணியில் அறிமுகமாகி உள்ளார். அதிக வயதில் இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமான 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முதல் இடத்தில் ஃபரோக் இன்ஜினியர் (Farokh Engineer) உள்ளார். 1974ல் ஃபரோக் இன்ஜினியர் தனது 36வது வயதில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார்.
சிறப்பாக விளையாடி வரும் வருண் சக்ரவர்த்தி
வருண் சக்ரவர்த்தி லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த பந்துவீச்சாளர்களுக்கு சிறந்த சராசரியை வைத்துள்ளார். மேலும் விஜய் ஹசாரே டிராபியில் 12.16 சராசரியுடன் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். சமீபத்திய டி20 தொடர்களில் அதிக விக்கெட்களை வீழ்த்தி வருகிறார். சாம்பியன்ஸ் டிராபியில் வருண் இடம் பெறலாம் என்று ரோஹித் சர்மா ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
"வருண் பவுலிங்கில் வித்தியாசமான ஒன்றைக் காட்டியுள்ளார். அவரைப் பற்றி அவர் தெளிவாகப் புரிந்து கொண்டார். எனவே நாங்கள் அவருடன் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்க விரும்புகிறோம். இந்த ஒருநாள் தொடர் அவர் என்ன திறன் கொண்டவர் என்பதைப் பார்ப்பதற்கும் இது ஒரு வாய்ப்பை அளிக்கிறது. நமக்காக விஷயங்கள் நன்றாகத் திட்டமிடப்பட்டு, அவர் தேவையானதைச் செய்தால், நிச்சயமாக நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று இருக்கிறது” என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: "கேப்டனின் பங்களிப்பு சரி இல்லை என்றால் டீமும் சரியாக விளையாடாது" - கபில் தேவ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ