Ashok Selvan 23rd Film : தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான அஷோக் செல்வன் நடிப்பில் தயாராகும் '#AS23 ' எனும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அஷோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். இவர் கடந்த ஆண்டு வெளியான ஸ்டார் படம் மூலம் பிரபலமானவர். இந்த திரைப்படத்தின் கதையை 'போர் தொழில்' எனும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற திரைப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் ராஜா எழுதியிருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகும் இந்த திரைப்படத்தை ஹாப்பி ஹை பிக்சர்ஸ் ( Happy High Pictures) சார்பில் தயாரிப்பாளர்கள் அஷோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
'ஓ மை கடவுளே' எனும் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை வழங்கிய நிறுவனத்தின் இரண்டாவது படைப்பு இது என்பதாலும், 'போர் தொழில்' பட புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதி இருப்பதாலும், '#AS23 ' படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும் படிக்க | ப்ளூ ஸ்டார் படத்தில் அசோக் செல்வனுக்கு பதில் நடிக்க வேண்டியது இவரா?
மேலும் படிக்க | “கருப்பா இருந்தா அழகில்லையா..?” அசோக் செல்வன் காரசார பேச்சு..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ