Indian Railways Rules Latest | மூத்த குடிமக்கள் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே அவர்களுக்காக கீழ் பெர்த்களை முன்பதிவு செய்வதற்கு சில விதிகளை உருவாக்கியுள்ளது. இந்த சிறப்பு விதிகள் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் பொருந்தும். ரயில்வே இந்த விதிகளை அவர்களின் வசதியான பயணத்திற்காக உருவாக்கியுள்ளது. மூத்த குடிமக்கள் தனியாகவோ அல்லது உறவினருடன் பயணம் செய்யும் போது இந்த வசதியைப் பெற்றுக்கொள்ளலாம் (senior citizen Train Ticket Rules).
பண்டிகைக் காலத்தில் மூத்த குடிமக்கள் ரயில் பயணத்தின்போது கீழ் படுக்கைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் இதற்காக, ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது என்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மூத்த குடிமக்களுக்கான விதிகள்
மூத்த குடிமக்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, IRCTC மூத்த குடிமக்கள் ஒதுக்கீடு விதியை மனதில் கொள்ளுங்கள். இந்த வசதி IRCTC மற்றும் பிற ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளங்களில் கிடைக்கிறது. இந்த ரிசர்வேசன் விதியின் கீழ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது மூத்த குடிமக்களுக்கு கீழ் படுக்கைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
குடும்ப பயணத்தின்போது கீழ் படுக்கை எப்படிப் பெறுவது?
முழு குடும்பமும் ஒன்றாக ரயிலில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், நீங்கள் மூத்த குடிமக்களுக்கான டிக்கெட்டை சீனியர் சிட்டிசன் முன்பதிவு என்ற ஆப்சனில் தனித்தனியாக முன்பதிவு செய்ய வேண்டும். இது மூத்த குடிமக்களுக்கு கீழ் படுக்கைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளை (Senior Citizen Railway ticket rules) அதிகரிக்கிறது, ஏனெனில் மூத்த குடிமக்கள் குடும்பத்துடன் ஒன்றாக டிக்கெட் புக் செய்யும்போது கீழ் படுக்கைகள் ரிசர்வேசனின் கீழ் கிடைப்பதில்லை.
சரியான வயது
மூத்த குடிமக்களின் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது அவர்களின் வயதை குறிப்பிடுவதில் எந்த தவறும் செய்யாதீர்கள், ஏனெனில் இதன் காரணமாக அவர்கள் டிக்கெட்டில் மூத்த குடிமக்கள் ஒதுக்கீட்டின் பலனைப் பெற முடியாது, மேலும் கீழ் படுக்கை வசதியும் கிடைக்காது.
எப்போது டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்?
பண்டிகை காலத்தில் இருக்கை பெறுவது ஒரு பெரிய விஷயம், எனவே நீங்கள் ஒரு மூத்த குடிமக்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போதெல்லாம் (மூத்த குடிமக்கள் முன்பதிவு), பயணத்திற்கு முன்பாக 15 நாட்களுக்கு மேல் இடைவெளி இருக்க வேண்டும், அப்போது தான் முன்பதிவு தொடங்கியவுடன் டிக்கெட்டை முன்பதிவு செய்வது இருக்கை கிடைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஏசி வகுப்பை விட ஸ்லீப்பர் பெட்டிகளில் அதிக இருக்கைகள் உள்ளன, எனவே ஸ்லீப்பர் பெட்டிகளில் கீழ் படுக்கை வசதி கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
பண்டிகை காலத்தில் கீழ் படுக்கை வசதி கிடைப்பது ஏன் சாத்தியமில்லை?
பண்டிகை காலத்தில் ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதும். அந்த நேரத்தில், உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவதே அதிர்ஷ்டம் தான். அதனால் பண்டிகைக் காலத்தில் மூத்த குடிமக்களுக்கு கீழ் பெர்த் கிடைப்பது கடினம்.
மூத்த குடிமக்களுக்கு என்னென்ன வசதிகள் உள்ளன?
ரயில் பயணத்தின் போது மூத்த குடிமக்களுக்கு டிக்கெட்டுகளில் தள்ளுபடி உள்ளது. முன்பதிவு செய்யும் போது கீழ் பெர்த் வேண்டும் என குறிப்பிடலாம். டிக்கெட்டில் குறிப்பிடவில்லை என்றால் கூட அருகில் உள்ளவர்களிடம் கேட்டு கீழ் பெர்த் பெற்றுக் கொள்ளலாம். ரயில் டிக்கெட் பரிசோதகரிடமும் கோரிக்கை வைத்து கீழ் பெர்த் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | ரயில் டிக்கெட் கேன்சல் பண்ணுனா எவ்ளோ பணம் கிடைக்கும்? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க
மேலும் படிக்க | ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் எடுப்பவரா... இந்த ரூல்ஸ் தெரியாவிட்டால் அபராதம் உறுதி!
மேலும் படிக்க | ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறையில் மிகப்பெரிய மாற்றம், நவம்பர் 1 முதல் அமல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ