"அதிகாரத்திற்காக அரசியலுக்கு வரவில்லை" தோல்வி குறித்து உருக்கமாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்!

மக்களுக்கு உதவ வேண்டும் என்றுதான் அரசியலுக்கு வந்தோம் என்றும் அதிகாரத்திற்காக வரவில்லை என்றும் டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Feb 8, 2025, 05:04 PM IST
  • டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025
  • பாஜக முன்னிலை உள்ள நிலையில், ஆட்சி அமைப்பதை உறுதிபடுத்தி வருகிறது
  • ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமான பேச்சு
"அதிகாரத்திற்காக அரசியலுக்கு வரவில்லை" தோல்வி குறித்து உருக்கமாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்!  title=

Delhi Election 2025: டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து, இன்று அதன் முடிவு வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த கட்சியின் ஒருகிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலே தோல்வியை தழுவியது அக்கட்சியினருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில், தோல்வி தொடர்பாக கெஜ்ரிவால் பேசியுள்ளார். 

டெல்லியில் கடந்த 2013ஆம் ஆண்டு பிறகு தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. தேர்தலுக்கு முன்பு கணிக்கப்பட்டது போல 70 தொகுதிகளில் பாஜக 48, ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் பாஜக சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டெல்லியில் ஆட்சி அமைப்பதை உறுதி செய்துள்ளது. 

அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கம்

இந்த நிலையில், ஆம் ஆத்மியின் படுதோல்வி குறித்து பேசிய கெஜ்ரிவால், பாஜகவிற்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (பிப்.08) வெளியாகி உள்ளன. மக்களின் இந்த தீர்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். பாஜகவிற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை மக்கள் கொடுத்திருக்கிறார்கள், அதன்படி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு பாஜக செயல்படும் என நம்புகிறேன். 

கடந்த 10 ஆண்டுகளில் கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம் என பல்வேறு துறைகளில் மக்களுக்கு எண்ணற்ற பணிகளை ஆம் ஆத்மி மேற்கொண்டது. இனி எதிர்க்கட்சியாக மட்டுமின்றி சமூக துறைகளில் மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து உழைப்போம். மக்களுக்கு உதவ வேண்டும் என்று தான் நாங்கள் அரசியலுக்கு வந்தோம். அதிகாரத்திற்காக இல்லை. எனவே எப்போதும் மக்கள் பக்கமே நிற்போம். மேலும், தேர்தலில் கடுமையாக பணியாற்றிய ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் எனப் பேசினார்.    

அரவிந்த் கெஜ்ரிவாலை சாடிய அண்ணா ஹசாரே 

முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி குறித்து பேசிய அண்ணா ஹசாரே, மது கொள்கை மற்றும் பணத்தின் மீதான பேராசையின் காரணமாக, அவர் தனது நற்பெயரை இழந்ததாகவும் ஒருபுறம் கெஜ்ரிவால் நற்குணத்தை பற்றி பேசுகிறார், மறுபக்கம் மதுவை ஊக்குவிக்கிறார் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டனர். இதன் காரணமாகத்தான் அவர் தோல்வியை தழுவி இருக்கிறார் எனக் கூறினார்.  

மேலும் படிங்க: டெல்லியில் மலரும் தாமரை.. ஆம் ஆத்மி கோட்டை விட்டது எங்கே? ஓர் அலசல்

மேலும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பாஜக வேட்பாளர்! யார் இந்த பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News