PM Kisan 19th Installment: பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற, விவசாயிகள் சில முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதில் ஒன்று e-KYC செயல்முறையை முடிப்பது.
PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் தவணை பணம் உங்கள் கணக்கில் எப்போது வரும்? இதன் 19வது தவணையின் வெளியீட்டுத் தேதி என்ன? விவசாயிகள் தங்கள் e-KYC-ஐ எப்படி செய்து முடிப்பது? இந்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.
பிஎம் கிசான் பயனாளிகளுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. பிஎம் கிசான் திட்டத்தின் 19வது தவணைக்காக விவசாயிகள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் 19வது தவணை தகுதியுள்ள விவசாயிகளுக்கு பிப்ரவரி 2025 இறுதிக்குள் வழங்கப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 24 அன்று பீகாருக்கு வருகை தரவுள்ளார் என்றும், அப்போது அவர் தனிப்பட்ட முறையில் இந்த நிதியை வெளியிடுவார் என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அங்கு பிரதமர் விவசாயத் திட்டங்களிலும் பங்கேற்று பல்வேறு மாநில மேம்பாட்டு முயற்சிகளைத் தொடக்கி வைப்பார் என்று கூறப்படுகின்றது.
பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற, விவசாயிகள் சில விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். அதில் முக்கியமான ஒன்று e-KYC செயல்முறையை முடிப்பது.
இதன் மூலம், தவணைத் தொகை நேரடியாக அவர்களின் ஆதார்-இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் சென்றடைவதை உறுதி செய்யலாம். இது மோசடியான கோரிக்கைகளைத் தடுக்க உதவுகின்றது.
விவசாயிகள் தங்கள் e-KYC-ஐ மூன்று முறைகளைப் பயன்படுத்தி செய்து முடிக்கலாம். முதலாவது OTP-அடிப்படையிலான e-KYC. இது PM-KISAN போர்டல் மற்றும் மொபைல் செயலியில் கிடைக்கும். இரண்டாவது, பயோமெட்ரிக் அடிப்படையிலான e-KYC. இதை பொது சேவை மையங்கள் (CSCகள்) மற்றும் மாநில சேவை மையங்களில் (SSKகள்) செய்யலாம். மூன்றாவதாக முக அங்கீகாரம் அடிப்படையிலான e-KYC. PM-Kisan மொபைல் செயலி மூலம் இந்த வசதியை அணுகலாம்.
PM-Kisan சம்மான் நிதி திட்டத்தில் பதிவு செய்ய, விவசாயிகள் இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். முதலில் அதிகாரப்பூர்வ PM-Kisan போர்டல் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யவும். உதவி தேவைப்பட்டால், அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) சென்று உதவி பெறலாம். மாநில அரசின் நியமிக்கப்பட்ட நோடல் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டும் உதவி பெறலாம். அல்லது, உள்ளூர் பட்வாரிகள் அல்லது வருவாய் அதிகாரிகளை அணுகலாம்.
இதற்கு முன்னர், பிரதமர் மோடி அக்டோபர் 15, 2024 அன்று பிஎம் கிசான் திட்டத்தின் 18வது தவணைத் தொகையை பயனாளிகளுக்கு வழங்கினார். விவசாயிகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட PM-Kisan திட்டத்தின் மூலம், ஆண்டுதோறும் மூன்று தவணைகளில் ரூ.6,000 வழங்கப்படுகின்றது.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நன்மைகளை பெற பயனாளிகள் தங்கள் e-KYC மற்றும் நிலப் பதிவுகளை சரிபார்த்து முடிக்க வேண்டும். இதை சரிபார்க்காத விவசாயிகளுக்கு அடுத்த தவணையின் பலன் கிடைக்காது.
வங்கிக் கணக்குகளில் நேரடி பலன் பரிமாற்றத் திட்டத்தை செயல்படுத்தாத விவசாயிகளுக்கும் அடுத்த தவணைக்கான பலன் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த தவணையை பெற விவசாயிகள் ஆதார் அட்டையுடன் வங்கிக் கணக்கை இணைக்கும் செயல்முறையை விரைவாக செய்து முடிக்க வேண்டும்.
மேலும், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்றவற்றில் உள்ள விவரங்கள் சரியாக இருப்பதை உறுதிபடுத்திக்கொள்வது மிக அவசியமாகும்.