TASMAC Leave Announcement | வள்ளலார் எனும் ராமலிங்க அடிகளார் நினைவு நாளையொட்டி வரும் 11 ஆம் தேதி திருச்சி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டாஸ்மாக் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், " சென்னை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர் அவர்களின் கடிதத்தில், வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தினை முன்னிட்டு 11.02.2025 (செவ்வாய் கிழமை) அன்று உலர்நாளாக (Dry Day) தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், (FL1) மூடப்பட்டிருக்கும்.
அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் LOILO FL2/FL3/FL3A/FL3AA & FL 11 வரையிலான ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். மேலும், அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் எச்சரித்துள்ளார்.
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் வரும் 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், " தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் 11.02.2025 (செவ்வாய்கிழமை) அன்று வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு மதுபான கடைகளை மூடிவைக்க வேண்டும்.
எனவே மேற்படி தினங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் (FL3A/FL3) அனைத்தும் மூடப்பட வேண்டும். மேலும் அன்றைய தினங்களில் மதுபானக்கடை மற்றும் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்மந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதே போல் அன்றைய தினங்களில் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தாலும் மதுக்கூடத்தின் உரிமங்கள் நற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை இரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் மதுக்கூட உரிமதாரர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | TNPSC Syllabus : டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டம் தொடர்பான முக்கிய அப்டேட்..!
மேலும் படிக்க | பள்ளிகளில் அதிகரிக்கும் குற்றங்கள்... இனி இதுதான் தண்டனை - அன்பில் மகேஷ் எச்சரிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ