“கடவுளே அஜித்தே” என அஜித்தே கூறிய சம்பவம்! பிரபலம் பகிர்ந்த தகவல்..

Ajith Kumar Joked Kadavule Ajithey In Shooting : நடிகர் அஜித், விடாமுயற்சி படப்பிடிப்பில் குறும்பாக நடந்து கொண்ட ஒரு சம்பவம் குறித்து அவருடன் நடித்த நடிகை ஒருவர் பகிர்ந்துள்ளார்.

Written by - Yuvashree | Last Updated : Feb 9, 2025, 07:20 PM IST
  • கடவுளே அஜித்தே எனக்கூறிய அஜித்!
  • உடன் நடித்தவர் பகிர்ந்த சம்பவம்..
  • என்ன சொன்னார் தெரியுமா?
“கடவுளே அஜித்தே” என அஜித்தே கூறிய சம்பவம்! பிரபலம் பகிர்ந்த தகவல்.. title=

Ajith Kumar Joked Kadavule Ajithey In Shooting : அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் விடாமுயற்சி. மகிழ்ச்சிறுமேனி இயக்கியிருக்கும் எந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். த்ரிஷாவின் தோழி கதை பாத்திரத்தில் வந்த ஒரு துணை நடிகை அஜித்துடன் தனக்கு ஏற்பட்ட ஸ்வீட்டான அனுபவம் குறித்து பகிர்ந்து இருக்கிறார்.

விட முயற்சி திரைப்படம்: 

துணிவு படத்தை அடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து தேர்தலில் வெளியான அஜித் படம், விடாமுயற்சி. தாமதமாக வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படமாக இப்படம் இருக்கிறது. அஜித் திரிஷா ஜோடியாக நடிக்கும் ஐந்தாவது படம் இதுவாகும். இவர்கள் மட்டுமல்லாமல் அர்ஜுன்-ரெஜினா கசான்ட்ரா ஆகியோர் வில்லன்களாக நடித்திருக்கின்றனர்.

ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜான் நாட்டில் எடுக்கப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த இந்த படம் கடைசியில் பிப்ரவரியில்தான் வெளியானது. தற்போது தமிழக மற்றும் உலகளவில் நல்ல வசூலையும் ஈட்டி இருக்கிறது.

“கடவுளே அஜித்தை” பிரச்சினை..

நடிகர் அஜித்திற்கு தானும் வாழ வேண்டும் தனது ரசிகர்களும் வாழ வேண்டும் என்று ஆசை இருக்கிறது. இதனாலேயே தனக்கு ரசிகர்களால் கொடுக்கப்பட்ட தல என்னும் பட்டத்தை வேண்டாம் எனக்கூறி இனி யாரும் தன்னை எப்படி அழைக்கக்கூடாது என அறிக்கை விடுத்தார். சரி என்று ஒப்புக்கொண்ட ரசிகர்கள், அவர் எப்படி கூப்பிடுவதை நிறுத்தினர்.

அதன் பிறகு ஆரம்பித்தது தான் “கடவுளே அஜித்தே” கோஷம். ஏதோ ஒரு நபர் திரைப்படத்திற்கு விமர்சனத்தை கொடுக்கும் போது கடவுளே அஜித்தே என கேமரா முன் கூற அது பெரிதாக வைரல் ஆனது. சமீப காலங்களில் தியேட்டர்களில் படம் வெளியாகும் போது ஹீரோ இன்ட்ரொடக்ஷன் காட்சி வரும்போது எல்லாம் எந்த ஹீரோ ஸ்கிரீனில் இருக்கிறாரோ அவருக்காக போஷம் போடுவதை விட கடவுளே அஜித்தே என பலர் கோஷமிட ஆரம்பித்தார்கள். இது அஜித்தின் காதுக்கு எப்படியோ சென்றுவிட்டது.

தனது ரசிகர்கள் இவ்வாறு தன் பெயரை கடவுளுடன் வைப்பதை விரும்பாத அவர், இனி யாரும் அவ்வாறு கூப்பிடக்கூடாது எனக்கூறி அறிக்கை விட்டார். அப்படி மீறி தன்னை கூப்பிட வேண்டுமென்றால் AK என அழைக்குமாறு கூறினார். அதிலிருந்து ரசிகர்கள் யாரும் அவரை எப்படி அழைப்பதில்லை.

அவரே கூறிய தருணம்..

விடாமுயற்சி படத்தில் சௌமியா பாரதி எனும் நடிகை, துணை கதாபாத்திரத்தில் வருகிறார். அவர் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கமான instagramல் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அது அஜித்துடன் இருக்கும் ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கும் அவர், அவருடன் நடந்த உரையாடலையும் விவரித்து இருக்கிறார். 

 

அதில் ஒரு முறை அஜித் தனது பெயரை ஞாபகம் வைத்து தன்னிடம் பேசியதாகவும், அதன் பிறகு அவருடன் நல்ல விஷயங்கள் குறித்து நிறைய பேசியதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். Savadeeka பாடல் ஷூட்டிங்கின் போது நடனமாட அவர் பதற்றமாக இருந்ததாகவும் அவ்வளவு காய்ச்சல் இருந்த நாளிலும் நன்றாக டான்ஸ் ஆடியதாகவும் அந்த பெண் குறிப்பிட்டு இருக்கிறார். 

ஷூட்டிங் இன் முதல் நாள், அவர் அருகில் தான் பதற்றத்துடன் அமர்ந்திருந்ததாகவும், அப்போது கலைப்பாக வந்து அமர்ந்த அஜித், “கடவுளே..” என்று கூறினாராம். சில வினாடிகள் கழித்து இவரை பார்த்து விட்டு “அஜித்தே” எனக் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு தான் விழுந்து விழுந்து சிரித்ததாகவும் அஜித்திற்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பதாகவும் அந்த பெண் கூறி இருக்கிறார். ரசிகர்களை தன்னை எப்படி அழைக்க வேண்டாம் என கூறிவிட்டு இவரே இப்படி ஒரு ஜோக் செய்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

மேலும் படிக்க | “கடவுளே அஜித்தே..” உருவானது எப்படி? எல்லாத்துக்கும் ‘இந்த’ வீடியோ தான் காரணம்!

மேலும் படிக்க | 'கடவுளே அஜித்தே' பொங்கி எழுந்த அஜித்... திடீர் அறிவிப்பு - என்ன சொன்னார் பாருங்க?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News