CGHS முக்கிய செய்தி: அரசு ஊழியர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள்.... இனி வசதிகள் மேம்படும்

CGHS Latest News: புதிய வழிகாட்டுதல்கள் சுவாசக் கருவிகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான ஒப்புதல் செயல்முறையை மேம்படுத்தி எளிதாக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கபட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 8, 2025, 04:57 PM IST
  • CGHS வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள்.
  • புதிய வழிகாட்டுதல்களின் முக்கிய அம்சங்கள் என்ன?
  • இதனால் கிடைக்கும் நன்மை என்ன?
CGHS முக்கிய செய்தி: அரசு ஊழியர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள்.... இனி வசதிகள் மேம்படும் title=

Central Government Health Scheme: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. சுகாதார அமைச்சகம் புதிய சிஜிஎஹ்எஸ்  வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் அமைந்துள்ளன. CGHS வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

CGHS New Guidelines: புதிய வழிகாட்டுதல்களின் முக்கிய அம்சங்கள்

புதிய வழிகாட்டுதல்கள் சுவாசக் கருவிகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான ஒப்புதல் செயல்முறையை மேம்படுத்தி எளிதாக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கபட்டுள்ளது. மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் CPAP, BiPAP மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்கான அனுமதியைப் பெறுவதற்கான ஆன்லைன் செயல்முறையை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் முழுமையாக மாற்றியுள்ளது. 

காகித அடிப்படையிலான பணிகளை குறைப்பதும், ஒப்புதல் செயல்முறையை விரைவுபடுத்துவதும், பயனாளிகளுக்கு அதிக வசதியை வழங்குவதும் இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கமாகும். புதிய நடைமுறையின் கீழ், CGHS பயனாளிகள் இனி தங்கள் விண்ணப்பங்களை டிஜிட்டல் முறையில் சுகாதார மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களில் தேவையான அனைத்து ஆவணங்களும் இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்க.

இணைப்பு-1 இல் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, பயனாளிகள் தங்கள் முழு விண்ணப்ப தொகுப்பையும் ஸ்கேன் செய்து, தங்கள் மண்டலம் அல்லது நகரத்தின் சம்பந்தப்பட்ட கூடுதல் இயக்குநரின் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் செய்ய வேண்டும். சுகாதார மையத்தில் அதிவேக ஸ்கேனர்கள் கிடைக்கவில்லை என்றால், ஆவணங்களை 1-2 நாட்களுக்குள் தபால் மூலம் அனுப்பலாம். ஆன்லைன் செயல்முறையை எளிதாக்குவதற்காக அனைத்து நல்வாழ்வு மையங்களுக்கும் அதிவேக ஸ்கேனர்களை வாங்க கூடுதல் இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களின் டிஜிட்டல் பதிவு

அனுமதிகள் வழங்கப்பட்ட விவரங்களின் டிஜிட்டல் பதிவுகளைப் பராமரிக்கவும், ஒப்புதல்களைக் கண்காணிக்கவும் அனைத்து விண்ணப்பங்களும் மின்னணு கோப்பு முறைமை மூலம் செயல்படுத்தப்படும். பயனாளியின் பெயர் மற்றும் ஐடி மற்றும் வழங்கப்படவுள்ள அனைத்து சுவாசக் கருவிகளின் விவரங்கள் மின்-கோப்பின் 'சப்ஜெக்ட்' பிரிவில் இடம்பெறும். இவை அனைத்தும் சிறந்த முறையில் பராமரிக்கப்பட ஈ-ஃபைல் எண், பயனாளி ஐடி மற்றும் அனுமதி விவரங்கள் போன்ற தகவல்கள் எக்செல் தாளில் குறிப்பிட்டு வைக்கப்படும்.

CGHS Beneficiaries: சிஜிஎச்எஸ் பயனாளிகள்

ஒரு பயனாளியின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், அது குறித்த விவரங்கள் அவ்வருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். பயனாணிகள் அதன் மென் பிரதி, அதாவது சாஃப்ட் காப்பியை சேவ் செய்து வைத்துக்கொள்ளலாம். இது டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி சுகாதாரத் துறை எடுத்துள்ள மற்றொரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது. ஆன்லைன் மூலம், டிஜிட்டல் முறையில் இப்போது பணிகள் நடப்பதால், இந்த பணிகளுக்கான செயலாக்க நேரம் இனி கணிசமாகக் குறையும். இதன் மூலம் CGHS பயனாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள் மேம்படும் என்றும், அவர்களுக்கு இனி அதிக நன்மைகள் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | PM Kisan: 19வது தவணை எப்போது கிடைக்கும்? அதற்கு முன் இதை செய்வது அவசியம்

மேலும் படிக்க | மகன் திருமணத்தை முன்னிட்டு ரூ.10,000 கோடியை நன்கொடையாக வழங்கிய அதானி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News