Additional Pension For Central Government Pensioners: 2024 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியது. 80 வயதை எட்டிய ஓய்வூதியதாரர்களுக்கு அரசாங்கம் கூடுதல் ஓய்வூதியத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த அதிகரித்த ஓய்வூதியம் பணவீக்கத்தைச் சமாளிக்கவும் மருத்துவச் செலவுகள் மற்றும் வீட்டுவசதி போன்ற பிற செலவுகளைச் சமாளிக்கவும் கூடுதல் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவும்.
Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள்
ஓய்வூதியதாரர் 80 வயதை அடையும் போது, அவர்கள் கூடுதல் ஓய்வூதியத் தொகைகளைப் பெறத் தொடங்குவார்கள் என அக்டோபர் 18, 2024 அன்று வெளியிடப்பட்ட குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் திறம்பட வாழ போதுமான ஆதரவை அளித்து நிதி உதவி வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
Additional Pension: கூடுதல் ஓய்வூதியம்
அக்டோபர் 18, 2024 அன்று, DoPPW 80 வயதை எட்டிய பிறகு ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும் கூடுதல் நிதி உதவி பற்றிய விரிவான வழிகாட்டுதலை வழங்கியது. CCS விதிகள் 2021 இன் விதி 44 இன் துணை விதி 6 ஐப் பயன்படுத்தி ஓய்வூதியத் தொகையைப் பெறலாம் என்று அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது. கூடுதல் ஓய்வூதியத் தொகை பணவீக்கம் மற்றும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க மூத்த குடிமக்களுக்கு நிதி உதவியை வழங்கும்.
Super Senior Citizens: ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் எப்போது கிடைக்கும்?
ஓய்வூதியதார்ரகள் 80 வயதை அடையும் போது அவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும். இந்த வயதுக்கு பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதல் ஓய்வூதியத்தில் 10% அதிகரிக்கப்படும். ஓய்வூதியம் பெறுவோர் 100 வயதை எட்டினால், அவர்கள் மொத்த ஓய்வூதிய கொடுப்பனவில் 100% வரை கூடுதல் ஓய்வூதியமாகப் பெறுவரகள்.
Compassionate Allowance: வயது வாரியாக கருணை உதவித்தொகை என்று அழைக்கப்படும் கூடுதல் ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும் என இங்கே காணலாம்.
- 80 வயது முதல் 85 வயது வரை: அடிப்படை ஓய்வூதியத்தில் 20% கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்.
- 85 வயது முதல் 90 வயது வரை: அடிப்படை ஓய்வூதியத்தில் 30% கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்.
- 90 வயது முதல் 95 வயது வரை: அடிப்படை ஓய்வூதியத்தில் 40% கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்.
- 95 வயது முதல் 100 வயது வரை: அடிப்படை ஓய்வூதியத்தில் 50% கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்.
- 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு: அடிப்படை ஓய்வூதியத்தில் 100% கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்.
ஓய்வூதியதாரர் 80 வயதை அடையும் மாதத்தின் முதல் நாளிலிருந்து கூடுதல் ஓய்வூதியத்தை பெறத்தொடங்குவார்.
கூடுதல் ஓய்வூதியத்தில் மாற்றம் ஏற்படுமா?
ஓய்வூதியதாரர்களுக்கு கூடிய விரைவில் கூடுதல் ஓய்வூதியம் குறித்த ஒரு புதிய அப்டேட் வர வாய்ப்புள்ளது. கூடுதல் ஓய்வூதியம் பெறத் தொடங்கும் வயது குறித்து நீண்ட நாட்களாக ஒரு கோரிக்கை இருந்து வருகிறது. தற்போது 80 வயதுக்குப் பிறகு கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கிறது. ஆனால், 65 வயது முதல் 75 வயது வரைதான் ஓய்வூதியதாரர்களுக்கு பணத்திற்கான தேவை அதிகமாக உள்ளதாகவும், 80 வயதிற்குப் பிறகு ஓய்வூதியத்தை அதிகரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் பரவலான கருத்து உள்ளது. இது குறித்து நாடாளுமன்றக்குழு அரசுக்கு ஒரு பரிந்துரையையும் அளித்துள்ளது.
நாடாளுமன்றக்குழு 65 வயதில் தொடங்கி, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதல் ஓய்வுதியத் தொகையை 5% உயர்த்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. அதன் படி,
- 65 வயதில் 5%,
- 70 வயதில் 10%,
- 75 வயதில் 15%,
- 80 வயதில் 20%
என்ற வகையில் ஓய்வூதியத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எனினும், இது குறித்து இன்னும் தெளிவான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த பரிந்துரை அமலுக்கு வந்தால், ஓய்வூதியதாரர்கள் பணி ஓய்வு பெற்று சில ஆண்டுகளிலேயே ஓய்வூதிய உயர்வை பெறத் தொடங்குவார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதல் ஓய்வூதியம் அல்லது கூடுதல் ஓய்வூதியம் பெறத் தொடங்கும் வயது ஆகியவற்றில் மாற்றத்திற்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.)
மேலும் படிக்க | PF உறுப்பினர்களே உஷார்! பிப்ரவரி 15 கடைசி தேதி, இதை செய்யவில்லை என்றால் பிரச்சனை
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: ஊதிய உயர்வு எவ்வளவு? 186%? 20-30%? அட்டகாசமான அப்டேட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ